விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் காணாமல் போய்விட்டார்கள் . டிக் டாக் புகழ் திருச்சி சாதனா
விஜய் டிவியில் விரைவில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி பற்றியும் விஜய் டிவி பற்றியும் டிக் டாக் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த திருச்சி சாதனா திடீர் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் நிலைமை மோசமாக ஆகிவிட்டது. அதனால் அதில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்று திருச்சி சாதனா பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் மனதை கவர்ந்த நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ஏழு சீசன்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் எட்டாவது சீசன் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன்பே இந்த நிகழ்ச்சியில் இதுவரைக்கும் தொகுப்பாளராக இருந்து வந்த கமல்ஹாசன் தான் திடீரென்று விலகப் போவதாக அறிவித்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து இனி அடுத்த தொகுப்பாளர் யார் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற தேடலும் மக்கள் மத்தியில் இருக்கிறது. இப்படியான நிலையில் ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு கேட்டகிரியில் போட்டியாளர்கள் தேர்ந்தெடுப்பது போல இந்த முறையும் தேர்ந்தெடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் டிக் டாக் பிரபலமாக இருந்த காலத்தில் அதன் மூலம் பிரபலமடைந்த திருச்சி சாதனா தற்போது instagram, facebook, youtube போன்ற சமூக வலைதள பக்கங்களிலும் பிரபலமாக இருக்கிறார். அவர் இன்று தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் விஜய் டிவியை மோசமாக திட்டி பேசி இருக்கிறார்.
விஜய் டிவியில் இதுவரைக்கும் 7 பிக் பாஸ் சீசன் நடந்திருக்கிறது. அதில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் வெளியே தெரியாமலேயே போய்விட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு இருந்த பிரபலம் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. ஓவியானு ஒரு பொண்ணு இருந்தது, அந்த பொண்ணு பல படங்களில் நடித்து டாப்பில் இருந்தது.
ஆனால் அந்த நடிகையை இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறக்கி அந்த பொண்ணு வாழ்க்கையே முடிச்சிட்டாங்க. ஜி பி முத்து வீடியோ வெளியிட்டு அவர் பாட்டுக்கு இருந்தார். ஜி பி முத்தை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு செல்ப் எடுக்காத வகையில் ஆக்கிவிட்டார்கள். இப்படி பல பேரை சொல்லலாம். எதற்கு தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துறாங்கன்னு தெரியல.
விஜய் டிவியில் இருந்து இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தூக்கிருங்க. விஜய் டிவியில் சீரியலாக இருந்தாலும் சரி, பிக் பாஸ் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அதில் கலந்து கொண்டவங்க வாழ்க்கை அவ்வளவுதான் முடிந்து போய்விடும் என்று கடுமையாக திட்டி பேசி இருக்கிறார். அதோடு, நான் இப்போ இந்த நிகழ்ச்சியை பற்றி எதற்காக பேசுகிறேன் என்றால் என்னிடம் பலர் மிக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போறீங்களா? என்று கேட்கிறார்கள்.
நான் ஒன்னே ஒன்னு தான் சொல்றேன் நான் கண்டிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே மாட்டேன். அதை சொல்வதற்காக தான் நான் இந்த வீடியோ வெளியிட்டு இருக்கிறேன் என்று இவர் திடீரென பேசி இருக்கும் நிலையில் இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது.
ஏற்கனவே வாய்ப்புக்காக திருச்சி சாதனா ரீல்ஸ் வீடியோக்களில் அரைகுறை உடையோடு வீடியோ வெளியிட்டு வருகிறார். ஆனால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை எதற்காக இந்த நேரத்தில் விமர்சித்து பேச வேண்டும்? ஒருவேளை இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்புக்காக முயற்சி செய்து அது கிடைக்கவில்லை என்ற கோபத்தில் இப்படி செய்த பேசுகிறாரா? என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
இன்னும் ஒரு சிலர் இவர் ஒருவேளை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாராக இருக்கும். அதனால் தான் கலந்து கொள்வது வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக இப்படி ஒரு ப்ரமோஷன் செய்கிறாரா? என்று கலாய்த்து வருகிறார்கள்.