இந்தியன் ரெட் கிராஸ்
திருச்சி கிழக்கு கிளை சார்பில்
இலவச கண் சிகிச்சை முகாம் .
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, திருச்சி கிழக்கு கிளை மற்றும் அப்போலோ பவுண்டேஷன், ராணா பவுண்டேஷன் ஆர். சி நடுநிலைப்பள்ளி,ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு இணைந்து சத்திர பேருந்து நிலையம் அருகே உள்ள பட்டவர்த் ரோடு ஆர்சி நடுநிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இவ்விழாவில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 3வது மண்டல தலைவர் மதிவாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில்
மலைக்கோட்டை பகுதி செயலாளர் மோகன், 13 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மணிமேகலை , அப்போலோ பவுண்டேஷன் மருத்துவர்கள் சசிகுமார்,சிவா,
ஆர்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் அமிலி,
இந்திய ரெட் கிராஸ் நிர்வாகிகள் சங்கர்,இளங்கோவன் , சுப்பிரமணியன் எட்மன்,, வில்லியம்ஸ்,கராத்தே செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் முனைவர் ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு
நிறுவனர் சங்கர் நன்றி கூறினார்.