திருச்சியில் காவல் உதவி ஆணையா்கள் 3 போ் நேற்று வியாழக்கிழமை திடீா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
அதன்படி திருச்சி கண்டோன்மெண்ட் உதவி ஆணையா் ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக பட்டுக்கோட்டை டிஎஸ்பி. பாஸ்கரும், திருச்சி தில்லைநகா் உதவி ஆணையா் ராஜூ நாமக்கல் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக கிருஷ்ணகிரி மாவட்ட மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி பாதுகாப்பு டிஎஸ்பி கே. தங்கபாண்டியனும்,
திருச்சி மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையா் முருகவேலு, தஞ்சை மாவட்ட ஊரக டிஎஸ்பியாக மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் டிஎஸ்பியாக உள்ள ஜி. அழகேசனும் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை காவல் துறை டிஜிபி சங்கா்ஜிவால் வெளியிட்டுள்ளாா்.