திருச்சி : தேர்தல் விதிமுறையை மீறியதாக வழக்கில் கருமண்டபம் பத்மநாதனுக்கு குற்றப்பத்திரிகை நகல்.
திருச்சி நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்டது.
கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட அமைச்சர் கே.என். நேருவை எதிர்த்து அதிமுக சார்பில் மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன் வேட்பாளராக போட்டியிட்டார்.
அப்போது அவர் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது தேர்தல் விதிமுறையை மீறி ஊர்வலம் சென்றதாக எடமலைபட்டிதூர் போலீசார் பத்மநாதன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு திருச்சி ஜெஎம் 2 நீதிமன்றத்தில் இன்று நீதிபதி பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது பத்மநாதனுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
பத்மநாதன் சார்பில் அதிமுக வக்கீல் முல்லை சுரேஷ்
ஆஜரானார்.
அப்பொழுது அதிமுக வக்கீல்கள்,சசிகுமார், ஜெயராமன், விக்னேஸ்வரன், சந்திரமோகன், கௌசல்யா,சேது மாதவன்,தினேஷ் பாபு, புவனேஸ்வரி,
அதிமுக நிர்வாகி ராஜாளி சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.