திருச்சி அல்லித்துறையில் குழிக்குள் தவறி விழுந்த குதிரை பரிதாப பலி. மற்றொரு குதிரை காயம்.குழியை கண்டு கொள்ளாத ஊராட்சி மன்ற தலைவர் .
சோமரசம்பேட்டை அருகே அல்லித்துறையில் குழிக்குள் விழுந்த குதிரை பலி.
சோமரசம்பேட்டை அடுத்துள்ள அல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட சரவணபுரத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் குழி ஒன்று தோன்றப்பட்டு நீண்ட நாட்களாக மூடாமல் இருந்து வந்தது. மேலும் இதுகுறித்து அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் இதுகுறித்து அல்லித்துறை ஊராட்சியிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வந்ததாக கூறப்படும் நிலையில் நேற்று அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசியது இதனால் அக்கம் பக்கத்தினர் அந்த பகுதியில் சென்று பார்த்தபோது அங்கு இருந்த குழிக்குள் இரண்டு குதிரைகள் கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்து அவர்கள் அந்த குழிக்குள் இருந்த குதிரையை மீட்டனர் அப்போது அதில் ஒன்று காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டது. மற்றொன்று இறந்து கிடந்தது .
மேலும் இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் இந்த பகுதியில் பல நாட்களாக மூடாமல் உள்ள இந்தக் குழியை மூடக்கோரி கூறினோம் ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எங்களது வீட்டில் குழந்தைகள் பள்ளிக்கு சென்று இந்த வழியில் தான் வருகின்றனர். ஒவ்வொரு நாளும் நாங்கள் குழந்தையை பத்திரமாக வீடு வந்து சேர வேண்டுங்க கடவுளை வேண்டிக் கொண்டு பயந்து பயந்து வாழ்கின்றோம். இப்போது குதிரை இறந்துள்ளது.
மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என பொதுமக்கள் தெரிவித்தனர்.