குழந்தைகள் முன்பு மது அருந்திய கணவனை கண்டித்த மனைவிக்கு அடி உதை.

திருச்சி பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் லியோ ஜேக்கப். இவரது மனைவி சுமதி (வயது 35) இந்த தம்பதியருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஜேக்கப்புக்கும் வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.
பின்னர் கள்ளக்காதலி வீட்டிலேயே தங்கி உள்ளார். எப்போதாவது
மனைவி குழந்தைகளை பார்க்கச் செல்வார். இவ்வாறு குடிபோதையில் வீட்டுக்கு வந்த ஜேக்கப் தனது குழந்தைகள் முன்னிலையில் மீண்டும் மது குடித்தால். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுமதி அவரை கண்டித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜேக்கப் அவரை தாக்கி கீழே தள்ளி வீட்டில் இருந்த பொருட்களை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்ற இதுகுறித்து சுமதி பாலக்கரை போலீசில் புகார் செய்தார் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சார்லஸ் ஜேக்கப்பை தேடி வருகின்றனர்.