திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மீத்தேன் திட்டம் கூடாது என எஸ்டிபிஐ கட்சியினர் மனு
திருச்சி மாநகராட்சி
அரியமங்கலம் குப்பை கிடங்கில் மீத்தேன் திட்டம் கூடாது .
எஸ்டிபிஐ கட்சி சுற்றுச்சூழல் அணி வலியுறுத்தல் .

திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்காக விடப்படும் என்று கடந்த 2019 ஆம் ஆண்டு சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தீட்டப்பட்டு குப்பைகள் மறுசுழற்சி செய்யப்பட்டு வந்தது. ஏறத்தாழ முக்கால்வாசி குப்பைகள் அகற்றப்பட்ட சூழ்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பாக குப்பையில் இருந்து மீத்தேன் எடுக்க போகிறோம் என்று கூறி ஒரு அறிவிப்பு தினசரி நாளிதழில் வந்தது.
மீண்டும் இப்படி ஒரு திட்டம் இந்த பகுதியில் செயல்படுத்தப்பட்டால் பொதுமக்களுக்கு அரசு அளித்த வாக்குறுதி என்னவாகும்.
மேலும் இந்த பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே மாநகராட்சி மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரி அரியமங்கலம் மண்டலம் மூன்றின் உதவி ஆணையரிடம்
எஸ்.டி,பி.ஐ கட்சியின் சுற்றுச்சூழல் அணி சார்பில் மாவட்டத் தலைவர் எஸ்.எஸ். ரஹமத்துல்லா கோரிக்கை மனு அளித்தார்.
இந்நிகழ்வில் திருவரம்பூர் தொகுதி தலைவர் அப்பாஸ் மந்திரி பொருளாளர் சாதிக் பாட்சா மற்றும் ஊடக அணி மாவட்ட செயலாளர் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.