மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தி, மனு அளித்தனர்
மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி
ஆர்ப்பாட்டம் நடத்தி, கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
திருச்சி மாவட்டத்தில் 11 மாதங்களாக மூடப்பட்டுள்ள மணல் மாட்டு வண்டி குவாரிகளை உடனடியாக தமிழக அரசும், பொதுப்பணித்துறையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மணல் மாட்டுவண்டி குவாரிகளை திறந்து மாடுகள், மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட சி.ஐ.டி.யு மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் இருந்து திருச்சி கலெக்டர் அலுவலகம் நோக்கி மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் பேரணியாக சென்றனர் .
பின்னர் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார் .சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜன், மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமர், கட்டுமான சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்திரசேகர்,சி.ஐ.டி.யு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாசன், சி.ஐ.டி.யு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தின் பொருளாளர் சர்க்கார் பாளையம் மோகன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அ அளித்தனர்.