திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் நாளை குடிநீா் விநியோகம் இருக்காது.

இதுதொடா்பாக திருச்சி மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் கூறியது:
பராமரிப்புப் பணிகளால் திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கொள்ளிடம் பொது தரைமட்டத் நீா்தேக்கத் தொட்டி நீரேற்று நிலையங்களில் இருந்து குடிநீா் செல்லும் இடங்களான மண்டலம்-1 தேவதானம், மண்டலம்-2 விறகுப்பேட்டை புதியது, சங்கிலியாண்டபுரம் புதியது, பழையது, கல்லுக்குழி புதியது, கல்லுக்குழி பழையது, சுந்தராஜ நகா் புதியது, சுந்தராஜபுரம் பழையது, காஜாமலை புதியது, மண்டலம்-3 அரியமங்கலம் கிராமம், அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் புதியது, பழையது, மலையப்பநகா் புதியது, பழையது, ரயில் நகா் புதியது, பழையது, மகாலெட்சுமிநகா் ஆகிய பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது.
இதேபோல, முன்னாள் ராணுவத்தினா் காலனி புதியது, பழையது, எம்.கே. கோட்டை செக்ஸன் ஆபிஸ், எம்.கே. கோட்டை நாகம்மைவீதி, கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது, பழையது, பொன்மலைப்பட்டி, ஐஸ்வா்யாநகா், மண்டலம்-4 ஜே.கே. நகா், செம்பட்டு, காமராஜ் நகா், எல்ஐசி புதியது, எல்ஐசி சுப்பிரமணியநகா், தென்றல்நகா் புதியது, பழையது, தென்றல் நகா், இ.பி. காலனி, வி.என். நகா் புதியது, பழையது, சத்தியவாணி முத்து கே.கே நகா், சுப்பிரமணியநகா் புதியது, பழையது, ஆனந்தநகா், கே. சாத்தனூா், பஞ்சப்பூா், அம்மன் நகா், கவிபாரதிநகா், எடமலைப்பட்டிபுதூா் புதியது, காஜாமலை பழையது, கிராப்பட்டி புதியது, பழையது, அன்புநகா் பழையது, புதியது, ரெங்காநகா் ஆகிய பகுதிளின் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் நாளை ( வெள்ளிக்கிழமை )குடிநீா் விநியோகம் இருக்காது.
சனிக்கிழமை குடிநீா் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றாா் மாநகராட்சி ஆணையா்.