திருச்சியில் நீட் தேர்வு,புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யக்கோரி முஸ்லிம் உரிமை பாதுகாப்பு மாநில செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
திருச்சியில் நீட் தேர்வு,புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யக்கோரி
முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசு இயற்றியுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மாணவர்களின் கல்வியை கேள்விக்குறியாக்கும் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்,திருச்சி மாநகரில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளைக்கோடு அடிக்க வேண்டும், காலியாக உள்ள ஆர்டிஓ மற்றும் காவல்துறையினரின் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், ரோட்டில் போகும் மக்களை விரட்டி, விரட்டி கடிக்கும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மதுரை ரோடு ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைமைக் கழகச் செயலாளர் சாதிக் கான், மாவட்ட செயலாளர் ஜாகிர் கான், மாவட்ட துணைச் செயலாளர் முபின், மாவட்ட பொருளாளர் நத்தர், மாவட்ட இளைஞரணி தலைவர் சபிக், மாநில மாணவர் அணி ஆரிபுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் ஜான் பாஷா, இளைஞர் அணி அமைப்பாளர் அன்வர்தீன், நிர்வாகிகள் ஜீவா, கஜேந்திரன், நிதின், நரேஷ், சாதிக் முகமது. ஜவகர், சையது முஸ்தபா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் மஜித் நன்றி கூறினார்.