திருச்சியில் நடைபெற்ற தமிழக மக்கள் நல கட்சியின் கருத்தியல் கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் .
திருச்சியில் தமிழக மக்கள் நல கட்சியின் கருத்தியல் கலந்தாய்வு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டலில் பொது செயலாளர் பேராயர். தனராஜ் தலைமைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில பொருளாளர் வழக்கறிஞர் ஏ.தாஸ் பிரகாஷ், மாநிலத் துணை செயலாளர் வேளாங்கண்ணி, மாநில இளைஞரணி இணை செயலாளர் எபிநேசன், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஏசுதாஸ், மண்டல செயலாளர் ஜான்சன் உட்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழக மக்கள் நல கட்சி சார்பில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 10 இடங்களில் போட்டியிடுவது எனவும், வருகிற செப்டம்பர் மாதம் பொதுக்குழு கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.