Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு 2 வாரங்கள் மேல் ஆகியும் திருச்சி கோட்டை காவல் துறையினர் குற்றவாளியை கைது செய்யாதது ஏன்?

0

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகாவை சேர்ந்தவர் சரவணன் (வயது 46). இவரது மனைவி கங்காதேவி திருச்சி பூம்புகார் விற்பனையகம் மேலாளராக பணியாற்றி வருகிறார் . கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை கடந்த இரண்டு வருடமாக பிரிந்து வாழ்கிறார் சரவணன்.

இந்த நிலையில் கடந்த மார்ச் 21ம் தேதி பொருட்கள் வாங்க சிங்காரத்தோப்பு வந்த சரவணன் ஊருக்கு திரும்ப பணம் இல்லாததால் தேவர் ஹால் எதிரில் உள்ள HDFC வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார். சரவணன் திருச்சி வந்ததை அறிந்த பூம்புகார் அலுவலக ஜூனியர் அசிஸ்டன்ட் அக்பர் கான் என்பவரது மகன் ஷபியுல்லாகான் (வயது 42) சரவணனை பின் தொடர்ந்து வந்து சரவணனிடம் உனது மனைவிக்கு விவகாரத்து தர முடியாதா என கேட்டுள்ளார் ? இதைக் கேட்பதற்கு நீ யார் என சரவணன் கேட்டதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதில் ஷபியுல்லாகான் சரவணனை ஜாதி பெயர் கூறி திட்டியதுடன் தனது கையில் உள்ள ஹெல்மெட்டால் சரவணனின் தலையில் தாக்கி உள்ளார் . இதனால் படுகாயம் அடைந்த சரவணன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மூன்று நாள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார் .

 

பின்னர் சரவணன் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார் , ஆனால் அங்கு புகார் மனு வாங்கப்படவில்லை ,

எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாததால் திருச்சி நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்து பின்னர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் மனு எடுக்கப்பட்டு கடந்த மே 27 ஆம் தேதி அன்று எஃப் ஐ ஆர் பதியப்பட்டது. (FIR 778). ஆனால் இன்றைய தேதி வரை புகார் அளிக்கப்பட்ட ஷபியுல்லாகான் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

ஷபியுல்லாகான்

இதற்குப் பின்னணியில் அரசு அதிகாரிகள் சிலர் தரும் அழுத்தமும் மற்றும் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் உள்ள ஓர் சில காவல்துறையினர் …. சொல்வதற்கு ஒன்றுமில்லை

உதவி ஆணையர் கண்டிப்பாக கைது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் , ஆனால் இது நடக்குமா என பெரும் மன உளைச்சலில் பாதிக்கப்பட்ட சரவணன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Leave A Reply

Your email address will not be published.