ரூ.200க்கு விலை போனார்களா திருச்சி தொகுதி வாக்காளர்கள் . வெளி மாவட்ட வேட்பாளரை தேர்ந்தெடுத்து மீண்டும் ஆப்பு வைத்துக் கொண்டுள்ளனர்.
திருச்சி லோக்சபா தொகுதியில் கடந்த, 1962ம் ஆண்டு முதல், 1980ம் ஆண்டு வரை, இந்திய பொதுவுடமை கட்சியைச் சேர்ந்த தோழர் ஆனந்தன் நம்பியார், கல்யாணசுந்தரம் ஆகியோர் எம்.பி.,க்களாக இருந்தனர். இவர்கள் ஆனந்தன் நம்பியார் கேரளாவைச் சேர்ந்தவர். கல்யாணசுந்தரம் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அதன்பின், 1980ல் தி.மு.க., சார்பில் திருச்சியைச் சேர்ந்த செல்வராஜ் எம்.பி.,யானார்.
பின், 1984ம் ஆண்டு முதல் காங்., கட்சியைச் சேர்ந்த அடைக்கலராஜ், 1998ம் ஆண்டு வரை தொடர்ந்து எம்.பி.,யாக இருந்தார். அதன்பின், 1998ல், சேலத்தைச் சேர்ந்த ரங்கராஜன் குமாரமங்கலம், பா.ஜ., சார்பில் திருச்சி தொகுதி எம்.பி.,யாக தேர்வானார். இவர் திருச்சி தங்கி திருச்சி மக்களுக்காக பணி செய்தார் அதன்பின் தொடர்ந்து, வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களே தொடர்ந்து திருச்சி லோக்சபா தொகுதி எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
1998ம் ஆண்டைத் தொடர்ந்து, 1999லும் எம்.பி.,யாக தேர்வானார்.
ரங்கராஜன் குமாரமங்கலம் இறந்ததால், 2001ல் நடந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் தலித் எழில்மலை வெற்றி பெற்று எம்.பி.,யானார். இவரும் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். எப்படியாக இருந்தவரை திருச்சி பக்கமே வந்ததில்லை.
2004ல் ம.தி.மு.க., சார்பில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த எல்.கணேசன் எம்.பி.,யானார். எம்பி ஆன பின் இவரும் திருச்சி பக்கம் வந்ததே இல்லை .
2009 மற்றும் 2014ம் ஆண்டில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த குமார், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2009 ல் வெற்றி பெற்ற உடனேயே திருச்சியில் சொந்தமாக வீடு வாங்கி தங்கி மக்கள் பணியாற்றினார். இதனால்தான் மீண்டும் 2014ல் வெற்றி பெற்றார். இனி இவர் திருச்சிக்காரர் .

2019ம் ஆண்டு நடந்த தேர்தலில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திருநாவுக்கரசர் காங்., சார்பில் போட்டியிட்டு எம்.பி.,யானார். 4.1/2 ஆண்டுகளாக திருச்சி பக்கமே வராதவர் மீண்டும் திருச்சியில் போட்டியிட விரும்பி மூன்று நான்கு மாதங்கள் மட்டும் சில நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார்.
தற்போது 2024ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வைகோ மகன் துரை, ம.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதுவரை வெளி மாவட்டங்களில் இருந்து வந்து திருச்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் திருச்சி மாவட்ட மக்களுக்கு எதுவும் செய்ததில்லை என்பதை தெரிந்தும் இவரை வெற்றி பெற செய்து உள்ளனர் திருச்சி மக்கள் .
இவர் தேர்தலில் போட்டியிடும் முன்பே எனது தந்தைக்காக தான் தேர்தலில் போட்டியிடுகிறேன் எனக் கூறியவர் இவர் எப்படி மக்கள் பணியாற்ற திருச்சியில் தங்குவார் ?
வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் மூத்த அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் செத்தாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டேன் எனக் கூறி திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே முகசூழிப்பை ஏற்படுத்தியவர் .
இதன்மூலம், திருச்சி லோக்சபா தொகுதியில் கடந்த, 1998ம் ஆண்டு முதல், தொடர்ந்து, வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களே எம்.பி.,யாக உள்ளனர். ரங்கராஜன் குமாரமங்கலம், ப. குமார் தவிர வேற யாரும் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை .
திருச்சி வாக்காளர்கள் தற்போது வெறும் ரூ.200 க்கு தங்கள் வாக்குகளை விற்று விட்டனர் என பலரும் கூறுகின்றனர்.
திருச்சியை சேர்ந்த பாரதிய ஜனதா கூட்டணியில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது இதன் மூலம் தெரிகிறது .
வெளி மாவட்டத்திலிருந்து திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்கள் திருச்சி தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டார்கள் தொகுதி பக்கமே வர மாட்டார்கள் என்பதை தெரிந்தும் திருச்சி மக்கள் மீண்டும் வெளி மாவட்ட வேட்பாளரை (துரை வைகோ) தேர்ந்தெடுத்தது மூலம் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்கள் தங்களுக்கு தாங்களே மீண்டும் ஆப்பு வைத்து கொண்டு உள்ளனர்.