Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஏ டி எஸ் பி வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து உள்துறை செயலாளர் அதிரடி உத்தரவு .

0

காவல்துறையில் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய வெள்ளதுரை, ஓய்வு பெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது காவல்துறையினர் மத்தியில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

ADSP வெள்ளத்துரை:

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளதுரை பணியில் இருந்து இன்று ஓய்வு பெற இருந்த நிலையில், ஒருநாளைக்கு முன்னதாக நேற்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2004ல் வனக் கொள்ளையர் வீரப்பனை சுட்டுக் கொன்றதாகக் கருதப்படும் காவல்துறை அதிகாரியான வெள்ளதுரை, அயோத்திக்குப்பம் வீரமணியை மெரினாவில் என்கவுண்டரில் கொன்றதன் மூலம் கவனம் பெற்றார். வீரப்பனை தேடும் சிறப்பு அதிரடிப்படையில் இவர் இடம்பெற்று இருந்தார். உதவி காவல் ஆய்வாளராக பணியைத் தொடங்கிய இவர், கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (AdSP) உயர்ந்துள்ளார். 2021 மே 7 ஆம் தேதி திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களை அச்சுறுத்தும் கும்பல்களைக் கண்காணிக்க வெள்ளதுரை டெப்டடேஷனில் நியமிக்கப்பட்டார். திருவண்னாமலையில் மாவ்ட்ட குற்றவியல் ஆவண காப்பாக ஏடிஎஸ்பி ஆக பணியாற்றி வந்தார். அவரது பணிக்காலம் முடிவடையவிருந்த நிலையில், மாநில டிஜிபி மற்றும் போலீஸ் படைத் தலைவர் (ஹோபிஎஃப்) சங்கர் ஜிவால் அமைதியான முறையில் ஓய்வு பெற பரிந்துரைத்து இருந்தார். ஆனால், மாநில உள்துறை வெள்ளதுரையை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

பணியிடை நீக்கத்திற்கான காரணம் என்ன?

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தியில் ஜூன் 6, 2013 அன்று புகாரளிக்கப்பட்ட, ராமு என்கிற (26) என்கிற குமார் என்ற கொக்கி குமார் என்பவர், போலீஸ் காவலில் இருந்தபோது மரணமடந்த வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டு வழக்கில், தற்போது ADSP வெள்ளத்துரை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் ADSP வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தமிழ்நாடு உள்துறை செயலாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.