சாதாரண தொண்டனாக கடைசி மூச்சு உள்ள வரை அதிமுகவில் இருந்து கழக,மக்கள் பணியாற்றுவோம்.திருச்சி முன்னாள் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர், மாணவரணி செயலாளர், இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர்,60A வட்ட செயலாளர்.
கடந்த 9ஆம் தேதி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி மாநகர் மாவட்டத்தை சேர்ந்த எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிந்தை முத்துக்குமார் , மாணவர் அணி செயலாளர் இப்ராம்ஷா, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை இணை செயலாளர் தசரத பாண்டியன் , 60 A வட்ட செயலாளர் ராஜா என்கிற சிவசங்கர ராஜவேலு ஆகியோரை தங்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவித்தார் .
இது குறித்து அவர்களிடம் கேட்டபோது நாங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர்கள், மேலும் புரட்சித்தலைவி அம்மாவின் அரசியல் செயல்பாடு மக்கள் நல பணிகளில் ஈர்க்கப்பட்டு அதிமுகவில் சாதாரண தொண்டனாக இணைந்து பணியாற்றி வருகிறோம். எங்கள் செயல்பாட்டை கண்டு எங்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டது. நாங்கள் வகித்த பதவியிலும் சிறப்பாகவே பணியாற்றி வந்தோம் .
அதிமுகவில் இணைந்தது முதல் தொடர்ந்து அதிமுகவிலேயே பணியாற்றி வருகிறோம் . ஓபிளஸ் அணிக்கோ மாற்று கட்சிக்கோ நாங்கள் செல்லவில்லை.
திமுக அமைச்சர்கள் உடனோ மாற்று கட்சி நபர்களிடமும் எந்த கள்ளத்தொடர்பும், மறைமுக உறவு கிடையாது .
நேர்மையாக உண்மையாக அதிமுக கட்சிக்கு மட்டுமே உழைத்து வருகிறோம் .
கழக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எடுத்த நடவடிக்கையை நாங்கள் தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறோம் .
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை அதிமுகவில் தான் பணியாற்றுவோம் . பல லட்சம் தொண்டர்களைக் கொண்ட கழகத்தில் லட்சத்தில் ஒருவனாக தொடர்ந்து கழகப் பணியுடன் மக்கள் பணியாற்ற உள்ளோம்.
மக்களின் குறைகளை குறிப்பாக தெருவிளக்கு. குடிநீர் பிரச்சனைகள் , சாக்கடை பிரச்சனைகள் போன்றவற்றை கட்சி பொறுப்பில் இருந்து கூறினால் அதிகாரிகள் உடனடியாக செய்து கொடுப்பார்கள் . சாதாரண தொண்டனாக இருந்து கோரிக்கை வைத்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்பது தெரியவில்லை .
ஆனாலும் தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் போன்ற கட்சிப் பணியாற்ற தயாராக உள்ளோம். பொறுப்பு இருந்தால் கூடுதல் உத்வேகத்துடன் பணியாற்றுவோம் .
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சிக்காகவும், மக்களுக்காகவும் பணியாற்றினோம். பணியாற்றுகிறோம், பணியாற்றுவோம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் .
என முத்துக்குமார், இப்ராம்ஷா, தசரத பாண்டியன், ராஜா ஆகியோர் தெரிவித்தனர் .