திருச்சி மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் பலி.
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டுமாந்திடல் பகுதியில் சூர்யா என்பவரின் வாழைத் தோட்டத்திற்கு உரம் வைப்பதற்காக மல்லியம்பத்து கொசவந்திடல் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி செல்வி (வயது 48) மல்லியம்பத்து நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மனைவி ராதிகா (வயது 44) ஆகிய இருவரும் வேலைக்குச் சென்றுள்ளனர் .வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது உயர் மின்னழுத்த மின் கம்பி அறுந்து கீழே கிடந்துள்ளது. இதை கவனிக்காமல் அந்த இரண்டு பெண்களும் மிதித்து விட்டனர். இதில் இரண்டு பெண்களும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே காட்டுத் தீ போல் பரவியது .சம்பவ இடத்தில் அப்பகுதி மக்கள் திரண்டனர்.இது குறித்து போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சோமரசம்பேட்டை போலீசார் 2 பெண்களின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.