திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் நீர் மோர் பந்தலை தலைமை குற்றவியல் நீதிபதி தொடங்கி வைத்தார் .
தற்போது உள்ள கடும் வெயில் நிலவி வருகிறது .
இதனை முன்னிட்டு திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் இம்மாதம் முழுவதும் மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

முதல் நாள் நிகழ்ச்சியை மாண்புமிகு தலைமை குற்றவியல் நீதிபதி என்.எஸ்.மீனாசந்திரா மற்றும் நீதிமன்றம் நடுவார்கள் சிவகுமார், பாலாஜி, சுபாஷினி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
விழாவில் மூத்த வழக்கறிஞர் மகேந்திரன், விக்கிரமாதிதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி காண ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி வெங்கட் செய்திருந்தார்.