திருச்சி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களால் நடத்தப்படும் நீர் மோர் பந்தலை மரக்கன்றுகள் வழங்கி தொடங்கி வைத்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் .
திருச்சி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் சார்பாக ஸ்டேட் பேங்க் மெயின் ப்ரான்ச் அருகில் பொதுமக்களை தாகம் தீர்க்கும் கோடைகால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது .

இந்த நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார், முன்னாள் அமைச்சர் வடக்கு மாவட்ட செயலாளருமான மு. பரஞ்ஜோதி, மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேருமான சீனிவாசன் ,கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டி.ரத்தினவேல், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சிந்தாமணி முத்துக்குமார், அம்மா பேரவை மாவட்ட செயலாளரும், முன்னாள் ஆவின் தலைவருமான கார்த்திகேயன், அம்மா பேரவை மாநில துணைச் செயலாளரும், திருச்சி மாமன்ற உறுப்பினருமான அரவிந்தன், வனிதா , ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவரும் , கவுன்சிலருமான அம்பிகாபதி, ஜங்ஷன் பகுதி செயலாளர் நாகநாதர் பாண்டி , கருமண்டபம் பகுதி செயலாளர் கலைவாணன் , ரோஜர், வர்த்தக அணி மாவட்ட துணை செயலாளர் டிபன் கடை கார்த்திகேயன், புங்கனூர் ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர்மோர், பழ வகைகள் மற்றும் மரக்கன்றுகளும் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .
திருச்சி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களால் பொதுமக்களின் தாகம் தீர்க்க நடத்தப்படும் இந்த பணிக்கு தாங்களாவே பொருள் உதவி, பண உதவி, உடல் உழைப்பு தந்து உதவிய , உதவ உள்ள அனைத்து நல் உள்ளங்களுக்கும் திருச்சி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் சார்பில் நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏