திருச்சியில் சர்வதேச செவ்வியல் கலைஞர்கள் நல அறக்கட்டளை சார்பில் செவ்வியல் செம்மல் விருது வழங்கும் நிகழ்ச்சி .
சர்வதேச செவ்வியல் கலைஞர்கள் நல அறக்கட்டளை நடத்திய சர்வதேச செவ்வியல் கலைஞர்கள் மாநாடு திருச்சியில் நேற்று கலையரங்கத்தில் நடைபெற்றது,
காலை 10 மணிக்கு நிகழ்ச்சி துவங்கி மதியம் 2 மணிக்கு நிறைவடைந்தது இந்த நிகழ்ச்சியானது நலிவடைந்த கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கி, திறமையான கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக *செவ்வியல் செம்மல்* விருது வழங்கப்பட்டது.
மாநகர மேயர் அன்பழகன், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். செல்வம்,தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். திருவள்ளுவன், கலைக்காவிரி பாதர் லூயிஸ் பிரிட்டோ , எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக இயக்குனர் திரு.மால் முருகன் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியானது கலைஞர்களை ஒன்றிணைத்து அவர்கள் நலனுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை முத்த ஆலோசகர் : டாக்டர் சின்னமனூர் சித்ரா நிறுவனர் மற்றும் தலைவர் : மீனா சுரேஷ்,நிர்வாக அறங்காவலர் கவிராணி, செயலாளர் ரோஷினி விஜயன், பொருளாளர் ஸ்ரீ எழுகை ரூபதி, துணை செயலாளர் வாணி சங்கீதா ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.