கணவன் வேண்டாம் மாமியாரே போதும். லெஸ்பியன் உறவுக்கு தொடர்ந்து வற்புறுத்தியதால் மாமியார் மருமகள் மீது போலீசில் புகார்
பெண்கள் சுதந்திரமாக சமூகத்தில் இயங்க பல முக்கிய மாற்றங்கள் கைக்கொடுக்கின்றன.
இருப்பினும் ஆண் – பெண் உறவுச் சிக்கல் என்பது தொடர்ந்துகொண்டே வருகிறது எனலாம். மணமுறிவுகளும் அதிமாகி உள்ளன.
ஒவ்வொரு மணமுறிவுகளுக்கு பின்னும் பல்வேறு சம்பவங்கள், வலிகள் இருப்பதால் அனைத்தையும் பொதுமைப்படுத்துவது கூடாது. அதாவது மணமுறிவு என்றாலே அது தவறு என்று கூறும் போக்கு ஏற்கத்தக்கது அல்ல. அதேபோல், மணமுறிவு நல்லது என்றும் சொல்ல இயலாது, ஆண் – பெண் தங்களின் உறவு குறித்து சரியான நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவதுதான் பரிந்துரைக்கக் கூடிய ஒன்றாகும்.
ஆண் – பெண் உறவை தாண்டி இப்போது பால்புதுமையினர் தங்களை சமூகத்தில் தங்களின் உண்மையான பாலினத்தை அடையாளப்படுத்திக்கொள்வது அதிகமாகியிருப்பதும் ஆரோக்கியமானதாகும். இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் சேர்ந்து வாழ்வது குற்றமில்லை என்று சட்ட ரீதியாக உறுதியளிக்கப்பட்டாலும் அவர்களின் திருமணம் இன்னும் ஏற்கப்படாமல் இருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, உத்தர பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
புலந்த்ஷாஹர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது மருமகளிடம் இருந்து தன்னை காப்பாற்ற வேண்டும் எனவும், மருமகள் தன்னை காதலிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அந்த புகார் மனுவில்,”கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் எங்களின் ஒரே மகனுக்கு திருமணம் செய்து வைத்தோம். அதன் பின் எங்கள் வீட்டுக்கு வந்த கொஞ்ச நாளிலேயே மருமகள் என்னிடம் வந்து தன்னை காதலிப்பதாக கூறினார். மேலும் என்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவள் கட்டாயப்படுத்தினார். அதிர்ச்சியளிக்கும் விதமாக, அவளின் இந்த எண்ணத்தை வீடியோவாக பதிவு செய்து பலருக்கும் அனுப்பினாள்” என்றார்.
மேலும், அந்த மாமியார் மிக கவலையுடன், ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு என் மீது ஒரு கண் இருந்துள்ளது. அவள் என்னிடம் வந்து, ‘உன்னை பார்த்ததில் இருந்தே என் இதயத்தை பறிகொடுத்துவிட்டேன்’ என்றாள். எனது மகனுடனான திருமணத்தில் அவளுக்கு விருப்பமே இல்லை, ஊருக்காக மட்டுமே அதை செய்துள்ளாள். அவள் தனது வாழ்க்கையை என்னுடன் வாழ வேண்டும் என்பதே உண்மையான விருப்பம் என்றும் கூறினாள்.
நான் என் கணவருடன் வாழவும் அவள் விடுவதில்லை, நான் அவளுக்கானவள் என தொடர்ந்து கூறுகிறாள் என்றார்.
தொடர்ந்து அந்த மாமியார்,”எனது மருமகள் என்னை கட்டாயப்படுத்தி உடலுறவு மேற்கொள்ள முயன்றாள். அவள் என்னை தொடர்ந்து மிரட்டுகிறாள். அவள் செய்வதை நான் தடுத்தால் என்னை தீர்த்துக்கட்டிவிடுவேன் என்கிறாள். இதெல்லாம் தவறு, நீ எனது மருமகள் மட்டுமே… மருமகளுக்கான அன்பையே உன்னிடம் வெளிக்காட்டினேன் என்றேன்.
அதற்கு அவள் இதுபோல் இருப்பது தவறில்லை என கூறி ஆபாச படங்களை காட்டுகிறாள். மேலும், பல மருமகள்கள் தங்களின் மாமியாருடன் சந்தோஷமாக இருப்பதாகவும் அவள் என்னிடம் கூறினாள். எனவே எனது மகனுக்கு விவாகரத்து பெற முயற்சி செய்தோம். அப்படி விவாகரத்து செய்ய முயன்றால் ரூ.20 லட்சம் கேட்டு வரதட்சனை கொடுமை செய்வதாக காவல்துறையில் புகார் அளிப்பேன் என மிரட்டுகிறாள்” என்றார்.
இதுகுறித்து புகார் அளித்த பெண்ணின் மகன் கூறுகையில்
,”திருமணமான புதிதிலே இதனை என்னிடம் கூறிவிட்டாள். என்னுடன் வாழ அவளுக்கு விருப்பம் இல்லை. என் தாயாருடன் வாழவே விரும்புகிறாள். நான் இல்லாவிட்டாலும் எனது தாயாருடன் வாழ வேண்டும் என கனவு கண்டு வந்துள்ளார். இது நடக்காது என கூறினால் செத்துவிடுவேன் எனவும் மிரட்டுகிறாள்” என்றார்.
இதுகுறித்து குற்றஞ்சாட்டப்படும் பெண் தரப்பில் இருந்து எவ்வித தகவல்களும் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.