திருச்சி குண்டூர் வந்துள்ள பிரபல ரவுடிக்கு டிஎஸ்பி தலைமையில் 25 துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேர பாதுகாப்பு .
திருச்சி குண்டூா் பா்மா காலனியில் தங்கியுள்ள மதுரை பரோல் கைதிக்கு டிஎஸ்பி தலைமையில் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை கீரைத்துறை காமராஜபுரம் திரு.வி.க. நகரைச் சோ்ந்தவா் காளீஸ்வரன் (எ) வெள்ளைக்காளி ( வயது 37). சரித்திரப் பதிவேடு ரௌடியான இவா் மீது 8 கொலை, 7 கொலை முயற்சி, 30 குற்ற வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் ஒரு வழக்குத் தொடா்பாக வேலூா் மத்திய சிறையில் இருந்த இவருக்கு 15 நாள்கள் பரோல் கிடைத்தது. இதையடுத்து அவா் திருச்சி குண்டூா் பா்மா காலனியில் உள்ள தனது சகோதரி சத்யஜோதி வீட்டில் தங்கியுள்ளாா்.
அவருக்கு கொலை மிரட்டல் இருப்பதால், டிஎஸ்பி தலைமையில் ஆய்வாளா் உள்ளிட்ட 25 துப்பாக்கி ஏந்திய போலீஸாா், வீட்டைச் சுற்றி 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இதனால் தங்களது பகுதியின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனா்.