அஇஅதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் பொதுமக்கள் தாகம் தணிக்கும் தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் குமார் தொடங்கி வைத்தார் .
அஇஅதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் பொதுமக்கள் தாகம் தணிக்கும் தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் குமார் தொடங்கி வைத்தார் .
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம், மணப்பாறை நகர கழகத்தில்.. தந்தை பெரியார் சிலை அருகில் கோடைகால தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தலினை

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், சர்பத் மற்றும் பழங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சந்திரசேகர் மற்றும் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் சின்னசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மணப்பாறை நகர கழக செயலாளர் பவுன் ராமமூர்த்தி, மற்றும் நகர கழக நிர்வாகிகளான சோனா.எத்திராஜ், பத்தி பாஸ்கர், ராஜா, சாய் சுரேஷ், கௌசிக், அபிலாஷ்,ராமன் எடத்தெரு ராமமூர்த்தி, ஆனந்த், தங்க தமிழ்ச்செல்வன், அப்பள குமார், வேல்முருகன் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.
மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட மீனவரணி செயலாளர் பொன்னுச்சாமி, இலக்கிய அணி செயளாலர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் இஸ்மாயில் ஆகியோருடன் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று சிறப்பித்தனர்.