திருச்சி பெரியமிளகுபாறையில் ஸ்ரீ துலுக்காணத்தம்மன், ஸ்ரீ ஒண்டி கருப்பண்ண சுவாமி, ஸ்ரீ மதுரை வீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், ஸ்ரீ கிருஷ்ணா் ஆகியோா் அருள்பாலித்து வருகின்றனா்.
இக்கோயிலின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்து, கடந்த 19 ஆம் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது.
இதற்காக அய்யாளம்மன் படித்துறையிலிருந்து புனித தீா்த்தக் குடங்கள் எடுத்து வரப்பட்டு, சனிக்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், தன்வந்திரி ஹோமம், லட்சுமி ஹோமங்கள் நடைபெற்றன. அன்று மாலை யாக சாலை பிரவேசம், கட ஸ்தாபனம், பூா்ணாஹூதி நடந்தது.
தொடா்ந்து, நேற்று விக்னேஷ்வர பூஜையுடன், கடம் புறப்பட்டு, காலை 9 மணி முதல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முதலில் மூலவருக்கும், அடுத்ததாக பரிவாரத் தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் பெரிய மிளகுபாறை சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
கும்பாபிஷேக விழாவினை கோயில் விழா குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர் .