திருச்சி கிழக்குத் தொகுதி 48வது வார்டில் மஞ்சள் காமாலை நோயால் பல குழந்தைகள் அவதி. நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் ?
மஞ்சள் காமாலை நோய் கல்லீரல், கணையம் அல்லது பித்தப்பையில் உள்ள பிரச்சனையின் காரணமாக இணைக்கப்படாத அல்லது இணைந்த பிலிரூபின் அளவுகள் அதிகரிப்பதால் ஏற்படுகிறது .
பொதுவாக, பிலிரூபின் இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது: இணைக்கப்படாத (மறைமுக) பிலிரூபின், இது நீரில் கரையாதது, இரத்த ஓட்டத்தில் உள்ளது, அல்புமினுடன் (பிளாஸ்மா புரதம்) பிணைக்கப்பட்டுள்ளது மற்றும் உடலில் இருந்து நேரடியாக வெளியேற்ற முடியாது.
எனவே, அது (இணைக்கப்படாத பிலிரூபின்) கல்லீரலுக்குச் சென்று, குளுகுரோனிக் அமிலத்துடன் இணைந்து, நீரில் கரையக்கூடிய இணைந்த (நேரடி) பிலிரூபின் (பிலிரூபின் யூரிடின் டைபாஸ்பேட்-குளுகுரோனோசில் டிரான்ஸ்ஃபெரேஸ்; யுடிபிஜிடி மூலம் வினையூக்கப்படுகிறது) மாற்றப்படுகிறது.
கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிக்கோ இருதயராஜிற்கு கிறிஸ்தவ மக்களின் மீது தான் அக்கறை இந்த தொகுதி மக்களின் மீது எந்த அக்கரையும் கிடையாது .
இதற்கு முக்கிய காரணம் குடிநீரில் உள்ள கிருமி தான் காரணம் எனக் கூறப்படுகிறது . இதனால் திருச்சி மாநகராட்சி சார்பில் வெளியிடப்படும் குடிநீர் தான் காரணமா என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் பல குழந்தைகள் இந்த நோயினால் பாதிக்கப்படும் முன் திருச்சி மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் சுகாதாரக் குழுவை அனுப்பி நடவடிக்கை எடுக்குமா என எதிர்பார்த்து உள்ளனர் 48வது வார்டு பொதுமக்கள் .