அதிமுக மாவட்ட செயலாளர் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு முதல் ஆளாக வாழ்த்து கூறிய கவுன்சிலர் அம்பிகாபதி.
திருச்சி அஇஅதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமாரின் பிறந்தநாள் விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

தெற்கு மாவட்ட அலுவலகத்தில் திருச்சி, மணப்பாறை, லால்குடி மற்றும் பல பகுதிகளில் உள்ள அதிமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அவருக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தனர் .
முன்னதாக திருச்சி மாமன்ற கவுன்சிலரும் , ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவருமான அம்பிகாபதி அதிகாலை முதல் ஆளாக மாவட்ட செயலாளர் குமார் அவர்களின் இல்லத்திற்கே சென்று இனிப்புகள், பழங்கள் மற்றும் மலர் கொத்து அளித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார் .