சிவகங்கை மாவட்டம், அருப்புகோட்டையை சோந்த மணிமாறன் என்பரது மகன் சக்திபிரகாஷ் (வயது 22). இவா், திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தாயனூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் கட்டடக் கலைப் பிரிவில் 4 ஆம் ஆண்டு படித்து வந்தாா். கல்லூரி அருகே பூங்குடி கிராமத்தில் வரதராஜன் என்பவருக்குச் சொந்தமான வயல்வெளியில் சக்திபிரகாஷ் உள்ளிட்ட 15 பேர் நேற்று நண்பா் ஒருவரது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனா். தொடா்ந்து, அனைவரும் அங்கிருந்த கிணற்றில் குளித்தனா். இதில், நீச்சல் தெரியாத சக்தி பிரகாஷ் கிணற்றில் மூழ்கினாா்.
இதைப் பாா்த்த சக மாணவா்கள், அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த திருச்சி தீயணைப்புப் படையினா் 30 அடி ஆழக் கிணற்றில் இறங்கி இறந்த நிலையில் சக்தி பிரகாஷின் சடலத்தை மீட்டனா்.
பின் உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.