தேசிய ஜனநாயக கூட்டணியின் திருச்சி பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அறிவிக்கப்பட்டு உள்ளார் .
வேட்பாளராக அறிவிப்பு வெளியானது முதல் தனது கட்சி தொண்டர்களையும் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு பெற்று வருகிறார் .
நாளை மதியம் 12 மணி அளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
பின்னர் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார் .