இந்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாயக் கூட்டமைப்பு சார்பில் டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் 113 வது பிறந்தநாள் விழா மாநில செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி தலைமையில் நடைபெற்றது .
இந்திய தொழிளார்கள் மற்றும் விவசாய கூட்டமைப்பு (HMKP) சார்பில் டாக்டர் ராம்மனோகர் லோகியா அவர்களின் 113 வது பிறந்தநாள் விழா திருச்சியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாநில செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி தலைமை வகித்தார்.
திருச்சி மாவட்ட செயலாளர் ராமசந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினர். சிறப்பு விருந்தினராக மாநில பொது செயலாளர் ராம் மோகன், தேசிய துணை தலைவர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக டாக்டர் ராம்மனோகர் லோகியாவிற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் ஜான் கென்னடி, தலைமை நிலைய செயலாளர் கோவிந்தராஜ், மாநில துணை தலைவர் அழகேசன், கரூர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், அரியலூர் மாவட்ட செயலாளர் சாமிநாதன், கோவை மாவட்ட செயலாளர் ஜான்ஷா பாவா மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் அறிவம்மா, கவிதா, ரேவதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பத்திர பதிவு எழுத்தளார் சங்க மாநில செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.