Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இளைஞர்களுக்காக போட்டியிடுவது பெருமையாக உள்ளது. பெரம்பலூர் திமுக பாராளுமன்ற வேட்பாளர் அருண் நேரு பேட்டி .

0

'- Advertisement -

தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அருண் நேரு அறிவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து நேற்று காலை திருச்சி வந்த அருண் நேருவிற்கு சமயபுரம் அருகே உள்ள டோல்கேட் பகுதியில் தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுயதாவது:-

பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளராக தலைவர் என்னை அறிவித்துள்ளார். இது பெரிய பொறுப்பும், வாய்ப்புமாக உள்ளது. இது மிக முக்கியமான தேர்தலாக உள்ளது. ஒன்றிய அரசும், சுற்றி உள்ள அரசுகளும் தமிழகத்தில் திராவிட மாடல்களை கண்டு பொறாமை பட்டு நிறைய விஷயங்களை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த தேர்தல் மக்களுடைய உரிமையை காப்பதற்காகவும், தமிழகத்திற்கு வரவேண்டிய எல்லா வளங்களையும் பெற்று தர வேண்டும் என்பதற்கான முக்கியமான தேர்தலாக உள்ளது.

இது இளைஞர்களுக்கான வாய்ப்பு, எல்லா இளைஞர்களுக்காக நான் போட்டியிடுவது பெருமையாக உள்ளது. அவர்கள் நினைப்பதை நான் சாதிப்பேன்.

40 தொகுதியிலும் தலைவர் இருப்பதாகவே கருத வேண்டும் என கூறியுள்ளார். இப்போது நாங்கள் வெறும் கருவியாக தான் உள்ளோம். எல்லோருக்கும் தொகுதியில் என்னென்ன செய்ய வேண்டும் எனபதை கொடுக்க உள்ளோம்.
பெரம்பலூருக்கு ரயில் நிலையம் கொண்டு வருவதற்கான பணியை துரிதப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.
இது தொடர்பாக தலைவர் கடிதம் எழுதி உள்ளார். ரயில் நிலையம் திட்டத்தை செயல்படுத்துவோம்.

மிக முக்கியமான விஷயங்களாக சுகாதாரமும், வேலை வாய்ப்பும் உள்ளது. தேர்தல் அறிக்கையில் தலைவர் தான் ஹீரோ.
அனைவரிடமும் கேட்டு அதன் அடிப்படையில் திட்டமிடுதலோடு தேர்தல் அறிக்கை வந்துள்ளது.
தேர்தல் அறிக்கை மக்களுடைய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி உள்ளது.
தேர்தல் அறிக்கையில் உள்ளதை கட்டாயமாக செய்ய முடியும் என தலைவர் கூறியுள்ளார்.

இந்தியா கூட்டணி வெற்றி பெற்று அனைத்தும் செய்யப்படும்
என அருண் நேரு தெரிவித்தார்.

வரவேற்பு நிகழ்ச்சியில் திருச்சி மாமன்ற உறுப்பினர்
முத்துசெல்வம்
தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.