தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது.
தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளருக்கான வேட்பாளர் இன்று தொடங்கியது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் தேர்தல் நடத்தும் அலுவலராகவும் திருச்சி ஆர்டிஓ உதவி தேர்தல் நடத்தும் அலுவலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே இவர்களிடம் திருச்சி தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் இன்று முதல் வருகிற 27 ந் தேதி வரை தினமும் காலை 11 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை வேட்புமனு வை தாக்கல் செய்யலாம்.
அதன்படி திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் ராஜேந்திரன் என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். டிஜிட்டல் இந்தியாவில் வேட்பாளர்கள் பணம் செலுத்த டிஜிட்டல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறி வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் பொழுது தன்னுடைய கழுத்தில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவற்றை மாலையாக அணிந்து வந்து மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமாரிடம் மனு தாக்கல் செய்தார். பிறகு அவர் கூறும் பொழுது டிஜிட்டல் இந்தியாவாக மாறி வரும் சூழ்நிலையில் வேட்பு மனு தொகையை டிஜிட்டல் முறையில் வாங்கினால் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
இன்று வேட்பு மனு தாக்கல் ஒட்டி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இன்று வேட்பு மனு தாக்கல் ஒட்டி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்
வருகிற 27ந் தேதி ஆகும். 28ந் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். 30 ந்தேதி மாலை 3 மணிக்குள் வேட்பாளர் மனுவை திரும்ப பெறலாம்.