Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வரும் பாராளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட உள்ளவர்கள் யார் ? சுவாரசிய தகவல் ….

0

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகளிடையே போட்டி எழுந்து நிலையில், இந்தத் தொகுதியை கேட்டுப் பெற மதிமுகவும் தீவிரம் காட்டி வருகிறது.

இதனிடையே, இதுவரை அமைதியாக இருந்த திமுகவும் களத்தில் குதித்துள்ளதால் யாருக்கு இந்த தொகுதி என்பதில் பொதுமக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் திருச்சி மக்களவைத் தொகுதியை தங்களுக்கு மீண்டும் ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியும், இந்த முறை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என மதிமுகவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஒருவேளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கினால் சிட்டிங் எம்.பி திருநாவுக்கரசர் அல்லது மறைந்த முன்னாள் எம்.பி அடைக்கலராஜ் மகனும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ஜோசப் லூயிஸ் ஆகியோர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:-

திருச்சி தொகுதி எம்.பி திருநாவுக்கரசருக்கு இந்த முறை வாய்ப்பு கிடைப்பது கடினம் தான். ஏனெனில் அவருக்கு தொகுதியில் சற்று அதிகமாகவே அதிருப்தி உள்ளது. கடந்த வரம் பத்திரிக்கையாளர்களை கெட்டவார்த்தையில் தான் திட்ட வேண்டும் என கூறியவர் . அவரது மகனும் எம்எல்ஏவாக உள்ளார். ஒரே குடும்பத்தில் 2 பேர் பதவி வகிக்கின்றனர்.

மேலும், அவரது தலையீட்டால் நிர்வாகிகள் பலர் மாற்றப்பட்டதால், கட்சியிலும் கடும் புகைச்சலை கிளப்பி உள்ளது. இதனால் அவர்கள், திருநாவுக்கரசருக்கு சீட் தரக்கூடாது, இந்த முறை மண்ணின் மைந்தரான ஜோசப் லூயிஸுக்கு தான் தரவேண்டும் என வற்புறுத்தி வருகின்றனர்.

 

ஆனால் திருநாவுக்கரசர் தனக்கே சீட் தரவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கிறார். இது கட்சித் தலைமைக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது என்றனர். மேலும், கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ போட்டியிடுவதற்காக இந்தத் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என மதிமுகவும் மல்லுக்கட்டி வருகிறது.

ஆனால், இதுவரை தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலையில், மதிமுக நிர்வாகக் குழு அவசர கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதனிடையே, காங்கிரஸ், மதிமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் வேண்டாம், தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என திமுகவிலும் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இங்கு முன்னாள் எம்எல்ஏவான கே.என்.சேகரன் தன் பங்குக்கு சீட் கேட்டு வருவதாகவும், அவருக்காக ஆதரவாக அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவைப் பொறுத்தவரை, புதுக்கோட்டை மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளரான கருப்பையா வேட்பாளராக களம் இறக்கப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. இதுகுறித்து அதிமுகவினர் கூறியது: புதுக்கோட்டை மணல் ஒப்பந்ததாரர் கரிகாலனின் சகோதரரான கருப்பையா, தாராளமாக செலவு செய்வார் என்பதால் கட்சித் தலைமை அவரை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை பகுதிகளில் கோயில்நிகழ்ச்சிகள், ஜல்லிக்கட்டு, கபடி போன்றவற்றுக்கு நிறைய செலவு செய்துள்ளார். அப்பகுதியில் செல்வாக்கானவர் என்றனர். ஆனால் இவர் போட்டியிடுவது அவரது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது . இவர் பத்திரிகையாளர்களை மதிக்காதவர்.

கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டால் முன்னாள் திருவெறும்பூர் எம்எல்ஏ செந்தில்குமார் சீட்டு கேட்பதாகவும் கூறப்படுகிறது . தற்போது மாவட்ட செயலாளர் டிவி கணேஷால் கட்சி பணியாற்றாமல் ஒதுங்கி உள்ளார் .

பாஜகவில் மாவட்ட துணைத் தலைவர் ஜெயகர்ணாவுக்கு சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கட்சியின் சார்பில் திருச்சியில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் மற்றும் எந்த ஒரு போராட்டங்களிலும் கலந்து கொண்டு மாட்டார். அண்ணாமலை, மோடி போன்ற தலைவர்கள் திருச்சியில் வந்தால் மட்டும் இவர் தலையை காட்டுவார் . காங்கிரஸில் உள்ள இன்டர்நெட் ரவி என்பவரிடம் பைனான்ஸ் கலெக்சன் பாய் வேலை பார்த்தவர், பின் ஜி.கே.வாசன் பினாமியாக இருந்து இன்று ஆக்சினா குரூப் ஆஃப் கம்பெனிஸ் எம்டி பல கோடிக்கு அதிபர் . இந்த பணம் எப்படி வந்தது என்பது வேறு கதை . பத்திரிகையாளர்களை மதிக்க கூட மாட்டார் . இவருக்கு சீட்டு கொடுத்தால் பாஜகவினரை ஓட்டு போட மாட்டார்கள். இந்நிலையில் தற்போது சீட்டு மட்டும் கேட்டு வருகிறார்.

முன்னாள் தேசிய குழந்தைகள் நலவாரிய உறுப்பினர் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர், திருச்சி பாராளுமன்ற இணை பார்வையாளர் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் இந்தியா முழுவதும் குழந்தைகள் நல வாரிய உறுப்பினராக சிறப்பாக செயல்பட்டு வந்தார் . தற்போது திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் உள்ள பாஜக நிர்வாகிகளை நேரடியாக சென்று சந்தித்து வருகிறார் . இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் என்று பொதுமக்கள்களை நேரடியாக இல்லம் சென்று சந்தித்து மோடியின் சாதனைகளை எடுத்து கூறி வருகிறார் . மேலும் பாஜக சார்பில் கிரிக்கெட் போட்டிகள், மருத்துவ முகாம் , வினாடி வினா நிகழ்ச்சிகள் , நலத்திட்ட உதவிகள் மற்றும் இதுதான் நேரம் மீண்டும் மோடி வேண்டும் போன்ற போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்களை திருச்சி தொகுதி முழுவதும் செய்து மக்கள் இடையே நன்கு அறிமுகம் ஆகி உள்ளார் . இவரும் பாஜக சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது . போட்டியில் தான் வெற்றி பெறவும் அதிக வாய்ப்பு உள்ளது .

ஒருவேளை பாஜக கூட்டணியில் அமமுக சேர்ந்தால் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான் அல்லது மாநகர் மாவட்டச் செயலாளரும் 47 வது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இவர் மாவட்ட செயலாளராகவும் மாமன்ற உறுப்பினராகவும் , சிறப்பாக மக்கள் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Leave A Reply

Your email address will not be published.