Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சாதிக் பாஷாவின் போதை பொருள் தொழிலுக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியும் உடந்தை. திருச்சியில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் குமார் .

0

 

போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில், தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி தலைமறைவாகியுள்ளார்.

டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஜாபர் சாதிக்கிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து அவரை தேடி வருகின்றனர்.

இதனிடையே, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாகவும் அதனை தடுக்க தவறிய விடியா திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதன்படி, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக, அதிமுக திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட கழக, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மகளிர் அணி மாணவர் அணி ஆகிய சார்பு அமைப்புகளின் சார்பில், திருச்சி மாவட்ட புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்பி குமார், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், அதிமுக திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட மாணவரணி செயலாளர்கள் பொறியாளர் இப்ராம்ஷா, டி. அறிவழகன், அழகர்சாமி, மகளிர் அணி செயலாளர் செல்வ மேரி ஜார்ஜ்,, மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர்கள் அருண் நேரு, சோனா விவேக், இலியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் அரசு கொறடா மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திரா காந்தி, பரமேஸ்வரி, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் அரவிந்தன், மாவட்ட துணைச் செயலாளர் கருமண்டபம் பத்மநாதன் , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன், இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆமூர் சுரேஷ் ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விடியா திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசியபோது :

விடியா திமுக அரசு செய்த ஒரே சாதனை தமிழகத்தை சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தல் தலைநகரமாக மாற்றியதுதான்,

ஒரு இடத்தில்2000 ம் கோடி ரூபாய்க்கு போதை பொருள் பிடித்தார்கள் என்றால் குறைந்தது 20 ஆயிரம் கோடிக்கு நெட்வொர்க் திமுகவுடன் ஜாபர் சாதிக் தலைமையில் 20 ஆயிரம் கோடிக்கு மேல் வரவு செலவு நடந்திருந்தால். சுமார் 2000 கோடிக்கு ஒரு இடத்தில் பிடிபட்டிருக்கும் இது தான் இந்த அரசு லட்சனம்.

தமிழகத்தில் மூன்று தினங்களுக்கு முன்னாள் 2000 கிலோ கஞ்சா பொருள் அகப்பட்டது. இதுவரைக்கும் தமிழகத்தில் பத்திற்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதற்கு உடந்தையாக திமுக மாவட்ட செயலாளர் கொரியர் ஆஃபீஸ்க்கு கைது செய்ய போன போலீஸ் அதிகாரிகளே கையாளகாத ஸ்டாலின் அரசு அவர்களை அடித்து துரத்தி இருக்கிறார்கள் ரிப்போர்ட்டர் உட்பட.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது.

இந்த அரசு வந்த மூன்று ஆண்டு காலத்தில் மக்கள் விரோத நடவடிக்கைதான்.

எல்லா திட்டத்தையும் நிறுத்தியதுதான் இந்த அரசு செய்த சாதனை.

திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தமிழகத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சர் செய்த பெரிய துரோகம் ஆட்சி வந்தவுடன் வரிவிதிப்பு,

சிறுபான்மையினருக்கு பெரிய துரோகம் செய்தது உதாரணமாக சொல்வதென்றால் திருச்சியில் தர்காவை இடித்துள்ளார்கள்,
கல்லறையை இடித்துள்ளார்கள்.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள சிறிய வியாபாரிகளை கூட லைசன்ஸ் எடுக்க சொல்லி டார்ச்சர் செய்வது, எடுக்கவில்லை என்றால் பிளாஸ்டிக் பை வைத்திருக்கிறேன் என கேஸ் போடுவது,
இதுபோன்ற பல்வேறு துரோகங்கள் செய்கிறது இந்த அரசு,

இந்த அரசுக்கு வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டும் அளவிற்கு 40க்கு 40 வெற்றி அடைய பாடுபடுவோம் என்று பேசினார்.

முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி பேசிய பொது:

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக தொடர்ந்து அதிமுக தரப்பில் வைக்கப்பட்டு வந்தது ஆனால் தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய திமுக அரசு அதைக் கண்டு கொள்ளாமல் இளைஞர்களை சீரழிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டது. போதை பொருள் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு உடன் திமுக குடும்பத்திற்கு நெருங்கி அதனால்தான் போதை பழக்கத்தையும் போதை பொருள் விற்பனையும் தடுக்க திமுக அரசு தவறி விட்டதாக குற்றம் சாட்டினார். திமுகவை வீழ்த்தி அதிமுக 40க்கு 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற மக்கள் உறுதியாக உள்ளனர் என பேசினார்.

தொடர்ந்து பா.குமார் பேசும்போது:

தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஏறத்தாழ 3 ஆண்டுகள் முடிந்துவிட்டது ஆனால் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகின்ற நிலை தான் தமிழ்நாட்டில் நீடித்து வருகிறது.

தமிழ்நாட்டில் போதை பொருளை கட்டுப்படுத்த வேண்டுமென அதிமுக தொடர்ந்து குரல் கொடுத்தாலும் அதை கண்டுகொள்ளாமல் திமுக அரசு செயல்பட்டது. மக்கள் மீது எந்த நலனும் காண்பிக்காமல், போதைப்பொருளை உற்பத்தி செய்பவர்களுக்கும் விற்பனை செய்பவர்களுக்கும்
அரணாக திமுக அரசு இருக்கிறது.

தமிழ்நாட்டில் தண்ணீர் வரி, வீட்டு வரி, மின் கட்டணம், மதுபானம் விலை உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலையை உயர்த்தி பொதுமக்களுக்கு இன்னல்களை கொடுத்தது திமுக அரசு.

தற்போது தமிழ்நாடு 3 லட்சம் கோடி கடனில் உள்ளது.
போதைப் பொருள் வழக்கில் முக்கிய குற்றவாளியான சாதிக் பாஷா, முதலில் ஜக்குபாய் படத்தின் சீடியை திருட்டுத்தனமாக விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். இதனைத் தொடர்ந்து அவ்வப்போது வெளிநாடுகளுக்கு குருவி போன்று பறந்து சில கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் அமீர் இயக்கிய ஆதி பகவன் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். அந்தப் படத்தின் தயாரிப்பாளராக இருந்தவர் திமுக மறைந்த எம்எல்ஏ ஜெ அன்பழகன் ஆவார். இவர் மூலமாக திமுகவின் முக்கிய நிர்வாகிக்கு சாதிக் பாஷா பழக்கமானார். பின்பு திமுக நிர்வாகியாக அப்போது இருந்த சிற்றரசு மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு நண்பராக சாதிக் பாஷா பழக்கமானார். பின்பு அதனைத் தொடர்ந்து திரை உலகம் சார்பாக நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு போதை பொருட்களை விற்பனை செய்வதை தொடங்கினார்.

குறிப்பாக நட்சத்திர விருந்துகளில் நடக்கக்கூடிய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் போதை பொருளை விற்பனை செய்யும் முக்கிய நபராக இவர் திகழ்ந்தார். அதுமட்டுமில்லாமல் லயோலா கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருளை சப்ளை செய்வதில் இருந்து வெளிநாடுகளுக்கு சப்ளை செய்யும் வரைக்கும் தனது தொழிலை விரிவு படுத்தினார்.

இதற்கு உடந்தையாக உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி,சேகர் பாபு, கனிமொழி, உள்ளிட்ட பலர் இருந்தனர்.

சாதிக் பாஷாவிடம் பணம் பெறாத திமுக நிர்வாகிகள் கிடையாது என குற்றம் சாட்டினார்.

திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தயாராக உள்ளார்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதியிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.

திமுக அரசு 2ஜி வழக்கில் ஊழல் செய்ததை மக்கள் எதிர்த்து அதிமுகவுக்கு வாக்களித்ததால் 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்தது.

அதேபோல் தற்போது போதை பொருள் விற்பனை செய்யும் நபர்களுடன் திமுக குடும்பங்கள் திமுகவின் முக்கிய அமைச்சர்கள் அனைவரும் தொடர்பில் உள்ளார்கள்.

போதை பொருட்கள் கடத்தியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் மேலும் வருகின்ற தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக வாக்களித்து அதிமுகவை மாபெரும் வெற்றி செய்ய மக்கள் தயாராக உள்ளார்கள்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டி திமுகவிற்கும் பிஜேபிக்கும் தான், எந்த இடம் என்றால் இரண்டாவது மூன்றாவது இடத்திற்கு போட்டி.
ஆனால் அண்ணா திமுக முதல் இடத்தில் வரப்போகிறது.

திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தயாராக உள்ளார்கள் என்றார்.

இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில்
கழக அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், வளர்மதி, முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, பூனாட்சி, எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் பொன் செல்வராஜ், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், ஜோதிவாணன்,
நிர்வாகிகள் ஜெ.பேரவை என்ஜினியர் கார்த்திகேயன், மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சிந்தாமணி முத்துக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் என்ஜினியர் இப்ராம்ஷா, கலிலுல் ரகுமான், மீரான், பாலாஜி, ஞானசேகர், வெங்கட் பிரபு, ஜான் எட்வர்ட், ராஜேந்திரன், சகாபுதீன், வக்கீல் ராஜேந்திரன், தென்னூர்
அப்பாஸ், இலியாஸ்,பகுதி செயலாளர்கள் அன்பழகன்,
சுரேஷ் குப்தா,வெல்ல மண்டி சண்முகம், ஏர்போர்ட் விஜி, ரோஜர், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, ராஜேந்திரன், கலைவாணன், நிர்வாகிகள் ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி,வக்கீல்கள்
முல்லை சுரேஷ், முத்துமாரி, வரகனேரி சசிகுமார், ஜெயராமன், சுரேஷ்,கங்கை செல்வன், தினேஷ்பாபு, தாமரைச்செல்வன்,கிருஷ்ணவேணி,
மற்றும் டாஸ்மாக் பிளாட்டோ , பாலக்கரை ரவீந்திரன், சதர், வாழைக்காய் மண்டி சுரேஷ், சக்கரவர்த்தி. கே.டி.ஏ ஆனந்தராஜ், எடத்தெரு பாபு,உடையான் பட்டி செல்வம்,டைமன் தாமோதரன், ஜடி நாகராஜ், ஏழுமலை, காசிபாளையம் சுரேஷ் குமார், வசந்தம் செல்வமணி, எ.புதூர்.வசந்தகுமார், என்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், ஜெயகுமார்,எம்ஜிஆர் மன்றம் உறந்தை மணிமொழியன், நாராயணன், வண்ணாரப்பேட்டை ராஜன், பொன். அகிலாண்டம், ஆரி, ஜோசப் செபா, சிதிஷ், சிங்கமுத்து, மாணவரணி ரஜினிகாந்த், கங்கைமணி,
,டி ஆர் சுரேஷ் குமார், ,வெஸ்லி,
மலைக்கோட்டை ஜெகதீசன்,மார்க்கெட் பிரகாஷ், ராமமூர்த்தி, ரமணி லால்,வரகனேரி சதீஷ்குமார்,தென்னூர் ஷாஜகான், ராஜா, தினகரன், கேபி. ராமலிங்கம், சாத்தனூர் வாசு, குருமூர்த்தி, ஒதக்கடை மகேந்திரன், மணிகண்டன்,
முன்னாள் கவுன்சிலர் நத்தர்ஷா, என்ஜினியர் ராஜா கல்லுக்குழி முருகன், வெல்லமண்டி கன்னியப்பன், கடை கார்த்திகேயன், எடத்தெரு எம்.கே. குமார், பொம்மாச்சி பாலமுத்து, சிந்தை ராமச்சந்திரன், ஈஸ்வரன், நாட்டாமை சண்முகம், அரப்ஷா, வெல்லமண்டி கன்னியப்பன், ராஜ்மோகன், ராமமூர்த்தி,
கல்மந்தை விஜி,
நிர்வாகிகள் சமயபுரம் ராமு,சுந்தர்ராஜன், செந்தில், எனர்ஜி அப்துல்ரகுமான், எம்பி.பிரகாஷ்,புத்தூர் பாலு, ராம் வெங்கடேஷ், முத்துகுமார், வர்த்தகப் பிரிவு ஸ்ரீகாந்த்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தெற்கு மாவட்டம் சார்பில்
எஸ்பிடி பாண்டியன், ராவணன், முத்துகுமார். சண்முக பிரபாகரன்,
மணப்பாறை சிவசுப்பிரமணியன்,
வக்கீல்கள் அழகர்சாமி, முருகன், பேராசிரியர் பாபு உள்ளிட்ட பலரும்,

வடக்கு மாவட்டம் சார்பில்
முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பு (எ) சுப்ரமணியன்,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான்,மீனவர் அணி பேரூர் கண்ணதாசன்,மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன், அறிவழகன் விஜய்,மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் வழக்கறிஞர் தேவா, இளைஞர் அணி துணை செயலாளரும் புங்கனூர் ஒன்றிய கவுன்சிலருமான கார்த்தி , ஒன்றிய செயலாளர்கள் முத்து கருப்பன், ஜெயக்குமார்,
அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோப்பு நடராஜ் .அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கடிகை ராஜகோபால். சிறுகமணி பேரூர் கழகச் செயலாளர் கே.வி செந்தில்குமார். அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய கழகப் பொருளாளர் பி எம் கதிர்வேல் இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சோனா விவேக்
உப்பிலியபுரம் அழகாபுரி செல்வராஜ்,
துறையூர் பிரகாஷ் அறிவழகன்,மாவட்ட கவுன்சிலர் அய்யம்பாளையம் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாணவரணி மாவட்ட செயலாளர் இன்ஜினியர் இப்ராம்ஷா நன்றி கூறினார்

Leave A Reply

Your email address will not be published.