Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பிரபல மாரியம்மன் கோவிலில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள வாகனம் மாயம். இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவன தலைவர் மகேஸ்வரி வையாபுரி புகார் .

0

'- Advertisement -

 

இந்து திருக்கோயில் மீது இயக்க நிறுவன தலைவர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

இந்து அறநிலையத்துறை திருச்சி மண்டல செங்கமலத்தான் குழுந்தாயி திருக்கோவில் வகையறாவுக்கு உட்பட்டது பட்டமரத்து மாரியம்மன் கோவில் மற்றும் முத்துக்கள் மாரியம்மன் கோவில்.

திருச்சி வரகனேரி ஆனந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள பட்டமரத்து மாரியம்மன் கோவிலில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதேபோல் வரகனேரி நித்தியானந்தபுரம் வடக்கு தெருவில் முத்துக்கண் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இதில் இரு கோவிலில் உபயதாரர்கள் மூலம் பெறப்பட்ட ரிஷப வாகனம், பூத வாகனம், யானை வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், சிங்க வாகனம் என தலா ஒரு வாகனமும், கமலம், குதிரை ஆகியவை தலா இரண்டு வாகனமும் பெறப்பட்டு இருந்தது.

இந்த வகையில் இரு கோவில்களிலும் 10 வாகனங்கள் இருந்தன. இதில் குடமுழுக்கு முடிந்த பின்னர் பட்டமரத்து மாரியம்மன் கோவிலில் இருந்த 8 வாகனங்கள் மாயமாகிவிட்டன என்ற புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்க நிறுவன தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி கூறுகையில், உபயதாரர்களிடம் இருந்து வாகனங்கள் பெறப்பட்டவுடன் அவர்களுக்கு ரசீது வழங்கப்படும். இதன் பின்னர் வாகனங்கள் அனைத்தும் கோவிலின் சொத்துகளாக மாறிவிடும்.

கோவில் அமைந்துள்ள எல்லையை தாண்டி வாகனங்கள் அதன் பின்னர் கொண்டு செல்லக்கூடாது. வீதி உலாவின் போது கோவில் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே வாகனங்களில் தெய்வங்கள் வீதி உலா வருவது வழக்கம். மற்றபடி அருகில் உள்ள சிறிய கோவில்களுக்கு வாகனம் வேண்டுமென்றால் இந்து அறநிலையத்துறை அனுமதி கடிதம் பெற்று தான் கொண்டு செல்ல வேண்டும். இதற்காக வாடகையும் வசூல் செய்து கொள்ளலாம். இந்த சூழ்நிலையில் திருச்சி வரகனேரி ஆனந்தபுரம் பட்டமரத்து மாரியம்மன் கோவில் குடமுழுக்கு முடிந்த பின்னர் இக்கோவிலில் இருந்த 8 வாகனங்களை காணவில்லை. குடமுழுக்கு திருப்பணி நிர்வாகிகள் இந்த வாகனங்களை எங்கு கொண்டு சென்றார்கள் என்பது தெரியவில்லை. இதற்காக உரிய பதிலும் அவர்கள் தரவில்லை. சுமார் 10 முதல் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்களை ஆகம விதிகளை மீறி வெளிப்பகுதிகளுக்கு கொண்டு சென்று விட்டதாக தகவல் தெரிகிறது.

அந்த வாகனங்கள் எங்கு இருக்கிறது, என்ன ஆனது என்பது குறித்து விசாரிக்கும்படி இந்து அறநிலையத்துறை இடம் புகார் செய்யப்பட்டது ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையுட் எடுக்கவில்லை. இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்கும் படி இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் மற்றும் செயல் அலுவலருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கோவில் செயல் அலுவலர் மற்றும் எழுத்தர் ஆகியோர் கட்டுப்பாட்டில் தான் வாகனங்கள் இருக்க வேண்டும். தற்போது வாகனங்கள் மாயமாகி இருப்பதற்கு இந்த இருவரும் தான் பொறுப்பாகும். ஆகவே இந்து அறநிலை துறை உதவி ஆணையர் இதுகுறித்து காவல் துறையில் புகார் அளித்து வாகனங்களை கடத்திச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார் மகேஸ்வரி வையாபுரி .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.