அகில இந்திய வேலை நிறுத்த விளக்க கூட்டம் நுகர்ப்பொருள் வாணிபக்கழக திருச்சி மண்டல அலுவலகம் முன் நடைபெற்றது .
வேலை நிறுத்த விளக்க வாயிற் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது .
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், உணவு, மருந்துகள், இயந்திரங்கள், விவசாய இடுபொருட்கள் மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும். பெட்ரோலிய பொருட்கள், சமையல் எரிவாயு மீதான கலால் வரியை குறைக்க வேண்டும், தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை மாதம் ரூ. 26 ஆயிரமாக நிர்ணயம் செய்ய வேண்டும், அனைத்து வாகன ஓட்டுனர்களையும் பாதிக்கும் பாரதிய நியாய சன்ஹிட்டா (இந்திய தண்டனை சட்டம்) பிரிவு 106 (1), (2) திரும்பப் பெற வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதா 2022 ஐ திரும்பப் பெற வேண்டும், பழையை ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கொள்முதல் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், கழக ரேசன் கடைகளை கூட்டுறவு துறைக்கு மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும், திருச்சி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக இண்டேன் எரிவாயு சுமைப்பணி ஊழியர்களுக்கு ஐஓசி வழங்கும் ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16ஆம்தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்த விளக்க கூட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக திருச்சி மண்டல அலுவலகம் முன் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்க மண்டல தலைவர் வேலு தலைமை வகித்தார். வேலை நிறுத்தத்தை விளக்கி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் பொதுத் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் புவனேஸ்வரன், மாநில செயலாளர் ராசப்பன், மண்டல செயலாளர் தீனதயாளன், சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் பேசினர். முடிவில் மண்டல பொருளாளர் சின்னையா நன்றி கூறினார்.