Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் .9வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா அணி.

0

 

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை தொடரில், முதல் அரை இறுதி போட்டி நடைபெற்றது.

போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த தொடரில் முதல்முறையாக இந்திய அணி முதலில் பந்து வீசியது.

இந்திய அணியில் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்களுக்கு கடினமான நெருக்கடியை கொடுத்தார்கள்.

தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க வீரர் பிரிட்டோரியஸ் 72(102), ரிச்சர்டு செலட்ஸ்வனே 64(100) என தாக்குப்பிடித்து விளையாடி ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி பந்துவீச்சில் மிகச் சிறப்பான கட்டுப்பாட்டை வெளிப்படுத்தி, கடைசி பத்து ஓவர்களில் 81 ரன்கள் விட்டுக் கொடுத்தது பின்னடைவாக அமைந்தது.

50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் ராஜ் லிம்பானி மூன்று மற்றும் முஷீர் கான் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து இந்திய அணி ஆட்டத்தை துவங்கிய முதல் பந்திலேயே ஆதர்ஷ் சிங் விக்கெட்டை இழந்தது. இதற்கு அடுத்து தொடர்ந்து முஷிர் கான் 4, அர்சின் குல்கர்னி 12, மோலியா 5 என 32 ரன்களுக்கு இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து பெரிய நெருக்கடிகள் விழுந்தது.

இந்த நிலையில் கேப்டன் உதய் சகரன் மற்றும் சச்சின் தாஸ் இருவரும் இணைந்து 181 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். நாற்பத்தி இரண்டு புள்ளி ஒன்று ஓவரில் இந்திய அணி 203 ரன்னில் சச்சின் தாஸ் விக்கெட்டை, அவர் 95 பந்தில் 96 ரன்கள் எடுத்திருந்தபோது இழந்தது. இவர் அதிரடி ஆட்டமே இந்திய அணியை இறுதிப் போட்டி முன்னேற செய்தது.

அவரது விக்கெட் விழுந்து அடுத்து உள்ளே வந்த ஆரவல்லி அவினாஷ் 10, முருகன் அபிஷேக் 0 என அடுத்தடுத்து வெளியேறினார்கள். அப்போது 14 பந்துகளுக்கு வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. உள்ளே வந்து முதல் பந்தை சந்தித்த ராஜ் லிம்பானி சிக்ஸர் அடிக்க நெருக்கடி குறைந்தது.

ஆனால் ஆட்டம் சமனில் நின்ற பொழுது சிறப்பாக விளையாடிய கேப்டன் உதய் சகரன் 124 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். ஒரு ஓவர் மீதம் இருந்தாலும் கூட விக்கெட் இரண்டு இருக்க ஒரு ரன் தேவைப்பட்டது. அப்பொழுது அந்தப் பந்தை சந்தித்த ராஜ் லிம்பானி மீண்டும் பவுண்டரி அடித்து அணியை வெல்ல வைத்தார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் உதய் சகரன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

மேலும் இந்திய அணி அண்டர் 19 உலக கோப்பை தொடரில் ஒன்பதாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்திருக்கிறது. தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்கா வழக்கம்போல் நாக் அவுட் சுற்றில் தோற்று வெளியேறியது.

Leave A Reply

Your email address will not be published.