பட்டியலின மக்களை தொடர்ந்து ஏளனமாக பேசி வருகிறது திமுக அரசு. கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் .
திமுக அரசை கண்டித்து தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் திருச்சி வாழவந்தான் கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக செயலாளர் ப.குமார் தலைமையில் திருச்சி வாழவந்தான் கோட்டை கடைவீதியில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் ப.குமார் பேசியதாவது: –
தமிழ்நாட்டில்
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அற்ற சூழ்நிலை நிலவுகிறது. பட்டியலின மக்களை தொடர்ந்து ஏளனமாக திமுக அரசு பேசிவருகிறது.
பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூர தாக்குதல் நடத்திய திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் மீது முறையான நடவடிக்கை எடுக்கவில்லை . இவ்வாறு பேசினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அருணகிரி, பாலசுப்பிரமணியன், தண்டபாணி,
எஸ்.பி. பாண்டியன், ராவணன், எஸ்.கே.டி.கார்த்திக், பேரூர் முத்துகுமார்,
மணப்பாறை சிவசுப்பிரமணியன்,
வக்கீல்கள் அழகர்சாமி, முருகன், கலைப்பிரிவு ராஜா,அண்ணா தொழிற்சங்கம் கார்த்திக்,தகவல் தொழில்நுட்ப பிரிவு சுரேஷ்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.