அமைச்சர் கே.என்.நேரு தொகுதியில் திமுக கவுன்சிலர் ராமதாஸ் குழந்தைகள் பள்ளியில் அடாவடி நலத்திட்ட உதவிகள். பெற்றோர்கள் வேதனை.
சில நாட்களில் பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வர உள்ளது.
தேர்தல் அறிவித்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்தால் அரசின் திட்டங்கள் மற்றும் கட்சி சார்ந்த எந்த ஒரு நலத்திட்டங்கள் வழங்கக்கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை.
திருச்சியில் கடந்த சில நாட்களாக தி.மு.க.தலைவர் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை காரணமாக கூறி வார்டு மற்றும் பகுதி வாரியாக மேற்கு தொகுதியில் அமைச்சர்
கே.என்.நேரு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
இன்று 6,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் திருச்சி ஒத்தக்கடை, தில்லை நகர் பகுதி, வண்ணாரப்பேட்டை , மிளகுபாறை, பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு வழங்கப்பட்டது..
இதில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் தொழிலதிபருமான அருண் நேரு கலந்து கொண்டு வேஷ்டி, புடவை, துண்டு, காலை உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த திமுகவினர், சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் பிரம்மாண்ட கட்வுட், பேனர்களை வைத்து இருந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெரிய மிளகு பாறை பகுதியில் வட்ட செயலாளர் மூவேந்தன் பிரதான சாலையை ஒட்டியே கொடிக்கம்பங்களை நட்டு வைத்திருந்தார்.
கருமண்டபம் பொன்னகர் பகுதியில் உள்ள மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது…
வகுப்புகள் நடந்த போதிலும், அரசியல்வாதிகள் திரண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தினர்
பள்ளிக்கு வந்த சிறார்கள், அரசியல்வாதிகளின் சொகுசு கார்களையும், நலத்திட்ட உதவிகள் பெற வந்திருந்த மக்கள் கூட்டத்தையும், ஸ்பீக்கர் சவுண்ட் வெடி சத்தத்தினால் மிரட்சியுடன் கடந்து சென்றனர்.
பள்ளி வளாகத்தில் நிகழ்ச்சி நடத்திய கவுன்சிலர் ராமதாஸ் பள்ளியில் நிகழ்ச்சியை நடத்தினால் வகுப்புகளுக்கு செல்ல சிறுவர் சிறுமியர் மிகவும் சிரமப்படுவார்கள் என்பது தெரிந்தும் மிகவும் அலட்சியமாக அமைச்சரிடம் நல்ல பெயர் வாங்குவது தான் முக்கியம் என கூறினார்.
பள்ளி வளாக மைதானத்தில் ஒலிப்பெருக்கி மூலம் திமுக கட்சி பாடல் ஒலிப்பரப்பட்டது இதனால் சிறுவர், சிறுமிகள் வகுப்பறையில் பாடம் கவனிப்பதில் மிகவும் சிரமம் ஏற்ப்பட்டது.
இது போன்ற நிகழ்ச்சிகளை கல்யாண மண்டபம் சமுதாயக்கூடம் தொந்தரவு இல்லாத இடத்தில் நடத்தி இருக்கலாம் ஆனால் ஆளுங்கட்சி எங்களை ஒன்றும் செய்ய முடியாது என ராமதாஸ் தெனாவட்டாக கூறியுள்ளார் .
தமிழக அரசியல் கட்சிகள் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை அரசு பள்ளி வளாகத்தில் எப்படி நடத்தலாம் அது போன்ற நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்.
என்பது பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரின் கோரிக்கையாக உள்ளது.