அண்ணாவின் நினைவு நாள் நிகழ்ச்சி : அனைவரும் திரளாக பங்கேற்க அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு .
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவுறுத்தலின்படி
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமையில்
பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு 03.02.24 காலை 10.00 மணியளவில் திருச்சி மேலசிந்தாமணி இ.ஆர் பள்ளி அருகில் உள்ள
பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட உள்ளது .
அது சமயம்
மாநில,மாவட்ட கழக நிர்வாகிகள்,
பகுதி கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள்,
கழக அணி செயலாளர்கள், நிர்வாகிகள்,
வட்ட கழக செயலாளர்கள். நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோன்
என மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள கூறியுள்ளார்.