திருச்சி: வெளிகண்டநாதர் கோயிலில் மாயமான ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலையை மிட்க கோரி இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவனத் தலைவர் மகேஸ்வரி வையாபுரி மனு.
திருச்சி பாலக்கரை வெளிகண்டநாதா் கோயிலில் மாயமான ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நந்தி சிலையை மீட்க இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து இந்து திருக்கோயில் மீட்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் மகேஸ்வரி வையாபுரி சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது :-

இக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதற்கான உத்தரவுகள் இருந்தும், தனிநபரின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.
எனவே, இக்கோயிலை மீட்டு இந்து சமய அறநிலையத் துறையின் முழு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
மேலும் கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளையும், கோயில் குளத்தையும், மாயமான நந்தி சிலையையும் மீட்க வேண்டும். கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அா்ச்சகரை நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.