திருச்சி வருகை தந்த எடப்பாடியை வரவேற்று பிரம்மாண்ட ப்ளக்ஸ், போஸ்டர்கள் அடித்த எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முத்துக்குமாரை பாராட்டிய எடப்பாடி பழனிச்சாமி .

திருச்சி அதிமுக எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளராக சிறப்பாக பணியாற்றி வருபவர் சிந்தை முத்துக்குமார் .
கடந்த பல வருடங்களாக அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
அதிமுக கட்சி என்பது மக்கள் சேவை ஆற்ற தானே தவிர பதவியை வைத்து பணம் பார்ப்பதற்கு அல்ல என்ற மனப் பக்குவத்தில் பொதுமக்களுக்கு விளம்பரம் இல்லாமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருபவர் முத்துக்குமார் .
கொரோனா காலகட்டத்தில் அப்போது மாமன்ற தேர்தல் நேரத்திலும் தனது வார்டுக்கு சம்மதம் இல்லாத பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை யாருக்கும் தெரிய வேண்டாம் எனக் கூறி வழங்கியவர் தான் முத்துக்குமார் .
தான் அரசியலுக்கு வந்ததே பொதுமக்களுக்கு உதவுவதற்காக தானே தவிர பணம் சம்பாதிப்பதற்காக இல்லை எனக் கூறுகிறார் .
இவர் மீது இவருக்கு பிடிக்காதவர்கள் பல பொய்யான தகவல்களை பரப்பினாலும் மக்கள் பணியில் செவ்வனே ஈடுபட்டு வருகிறார்.
ஜெயலலிதாவின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.




தற்போது இரண்டு நாள் பயணமாக திருச்சி வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று திருச்சி மாநகரம் முழுவதும் புரட்சி தமிழரே, கழக பொதுச் செயலாளரே, விவசாயிகளின் பாதுகாவலரே, நல்லாட்சி நாயகரே , மக்கள் முதல்வரே, ராஜராஜ சோழனே என பல்வேறு பட்டங்களை சூட்டி வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகள் மற்றும் அடிக்கப்பட்ட பேனர்களை பார்த்த எடப்பாடி பழனிச்சாமி முத்துக்குமாரை அழைத்து பாராட்டி அவரது பணியினை வாழ்த்தி மேலும் சிறப்பாக பணியாற்ற கூறி சென்றுள்ளார்.



திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் இவ்வாறு துடிப்பாக மக்கள் சேவையாற்றி வரும் இளைஞரான முத்துக்குமாரை அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் வெகுவாக பாராட்டி வந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டியதால் இனி எனது பகுதி இல்லாமல் என்னை நம்பிய அனைத்து . பொதுமக்களுக்கும் கட்சி பாகுபாடு இன்றி என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என கூறினார் திருச்சி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிந்தை முத்துக்குமார்.

