திருச்சி திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள கேர் குழும நிறுவனத்தின் 12வது பட்டமளிப்பு நேற்று மாலை நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு இவ்விழாவிற்கு VDart குழுமத்தின் நிறுவனர் & CEO சையது என்னும் சித் அகமது சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு உறுதிமொழி ஏற்று பட்டதாரிகளுக்கு பட்டதாரி சான்றிதழ்களை வழங்கினார்.

இதில் MBA பிரிவில்ல் 24, ME இன்ஜினியரிங் டிசைனில் 2, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 15, சிவில் இன்ஜினியரிங் 6. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் 10, கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் 16, கட்டிடக்கலை இளங்கலை 52 என மொத்தம் 125 பேர் பட்டம் பெற்றனர் .
விழாவில் கேர் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி பிரதிவ் சென்ட்., கேர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர்.சாந்தி.
டாக்டர். பசும்பொன் பாண்டியன், கேர் ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் மேடையில் இருந்தனர்.
பட்டமளிப்பு விழாவில் கேர் குழும நிறுவனங்களின் பட்டதாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள். ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.