திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழா – அமைச்சர் கே.என் நேரு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினார்.
வேளாண் பெருங்குடி மக்களையும் – விவசாயத்தின் உன்னதத்தையும் பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் வரிசையில் அரசு அலுவலகங்கள்,
கல்லூரி வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு நிறுவனங்களில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே பொங்கல் விழா கொண்டாடுவது வழக்கம்.
திருச்சி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு மண்பானையில் பொங்கல் சமைத்து, பொங்கலோ பொங்கல் என்கிற கிராமிய வார்த்தைகளை கூறி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை அமைச்சர் தெரிவித்து கொண்டார். இதற்கு அடுத்தபடியாக உரியடிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் பானையில் கட்டி இருந்த பூவை தட்டி விட்டார். அமைச்சருக்கு பின்பாக களத்தில் இறங்கிய திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஒரே அடியில் பானையை உடைத்து சுற்றி இருந்தவர்களுக்கு உற்சாகம் மூட்டினார்.
இவ்விழாவில் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.