Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டிவிஎஸ் டோல்கேட்டில் புதிதாக முளைத்த கடைகள் திறக்க முட்டுக்கட்டையாக இருக்கும் 47 வது வார்டு அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன். ஏன் ?….

0

 

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் வளைவில் அரசு பேக்குவரத்து டெப்போக்கு ( பணிமனை ) சொந்தமான இடத்தில் சிலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்துக்கும் மேற்பட்ட கடைகளை கட்டி முடித்தனர் .

இந்த கடைகளுக்கு பார்க்கிங் வசதி என்பது சுத்தமாக கிடையாது. நெடுஞ்சாலையில் தான் வாகனங்களை நிறுத்த வேண்டும.

இந்த இடம் டிவிஎஸ் டோல்கேட் பஸ் நிறுத்தம் உள்ள பகுதி என்பதால் மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும் .

இந்த பேருந்து நிறுத்தத்தில் சட்டக் கல்லூரி , ஜமால் முகமது கல்லூரி, காஜாமியான் பள்ளி , சமது பள்ளி. ஜான் பிரிட்டோ போன்ற கல்லூரி, பள்ளி மாணவ மாணவி காலை நேரத்தில் அதிகமாக இந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தான செல்வார்கள்.

மிகவும் போக்குவரத்து நிறைந்த இந்த இடத்தில் தினசரி உயிர் பலி ஏற்படும் நிலை உள்ளது.

இது 47வது வார்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக கவுன்சிலர் செந்தில் நாதனுக்கு தெரிந்துதான் நடைபெறுகிறது என சிலர் கூறியதை நாம் அவரிடம் நேரில் சென்று கேட்டபோது:.

முதலில் கடும் கோபத்துடன் புகார் கூறிய நபர் யார் என்று சொல்லுங்கள் அவர் மீது நான் வழக்கு தொடர வேண்டும் என கூறினார் .

பணி முடிந்தும் அந்த கடைகள் திறக்காமல் இருப்பதற்கு யார் காரணம் என விசாரிங்கள் எனக் கூறினார் . மேலும் இந்த இடம் முற்றிலும் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான இடம். இந்த கடைகளுக்கும் மாநகராட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை . இருந்தும் நான் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் திறக்கக் கூடாது என நோட்டீஸ் அனுப்பி உள்ளேன் .
இந்த வார்டில் திமுக கவுன்சிலர் இருந்திருந்தால் எப்பவோ கடைகள் திறந்திருக்கும் .

திருச்சி மாநகராட்சியில் உள்ள சில கவுன்சிலர்கள் தரைக்கடை வியாபாரிகள், பிரியாணி கடைகள் வியாபாரிகளிடம் பிடுங்கி தின்பது போல் நான் ஒன்றும் கேவலமானவன் கிடையாது.

என்னை எனது வார்டில் உள்ள தரைக்கடை வியாபாரிகள் யாருக்கும் தெரியாது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக தான் அரசியலுக்கு வந்தேனே தவிர இதுபோன்று சில்லறை வேலைகளில் ஈடுபட அல்ல .

தற்போது இந்த கடைகளை திறந்தால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜசேகர் அவர்களும் உடனடியாக போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறியதால் மட்டுமே இந்த கடைகள் இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது என நம்மிடம் கூறினார் .

எனவே வாடகை பணத்திற்காக ஆசைப்பட்டு போக்குவரத்து துறையினரும் இந்தக் கடைகளை திறக்க அனுமதிக்க கூடாது என்பதே பொதுமக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாகும் .

நெடுஞ்சாலைத் துறையும் விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க உடனடியாக களத்தில் இறங்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.