Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சுப்ரமணியபுரம் அருகே சாலையில் திரிந்த மாடு வாலிபர் பரிதாப பலி. மாநகராட்சி சார்பில் கால்நடைகள் பிடிக்கப்படுகிறதா? பொதுமக்கள் கேள்வி .

0

 

திருச்சி, விமான நிலையம் காமராஜ் நகா் திலகா் தெரு பகுதியை சோந்தவா் இளந்தீபன் (வயது 38).பெயிண்டிங் வேலை செய்து வந்தாா். இவா், அதே பகுதியை சோந்த நண்பா் சதீஷ் (35) என்பவருடன் நேற்று மாலை, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து, டிவிஎஸ் டோல்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தாா். அவா்களுக்கு பின்னால் ஒரு தனியாா் பேருந்தும் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. சுப்பிரமணியபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, திடீரென மாடு ஒன்று சாலையில் குறுக்கே சென்றதால் அதன் மீது மோதாமல் இருக்க, பேருந்து ஓட்டுநா் பேருந்தை வலப்பக்கம் வேகமாக திருப்பியுள்ளாா். இதில் பேருந்துக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த சதீஷின் இருசக்கர வாகனத்தில் பேருந்து மோதியது.

இதில் சதீஷ், இளந்தீபன் இருவரும் நிலைதடுமாறி வாகனத்துடன் சாலையில் விழுந்தனா். அவா்களில் இளந்தீபன் மீது பேருந்து ஏறி இறங்கியதால். அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சதீஷ் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சோக்கப்பட்டுள்ளாா்.

 

விபத்தில் சாலையில் திரிந்த மாடும் பரிதாபமாக பலியானது .

தகவலறிந்த திருச்சி மாநகர காவல்துறை, தெற்கு பிரிவு போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மாநகரப் பகுதிகளில் தற்போது சாலைகளில் திரியும் மாடுகள், நாய்கள், குதிரைகள் நடமாட்டம் பெருகிவிட்டது . இதற்கு முன்னால் மாநகராட்சி கால்நடைகளை பிடிக்கும் ஒப்பந்ததாரர் தமிழ்ச்செல்வம் இருக்கும் வரை ஓரளவு சாலையில் திரியும் கால்நடைகள் கட்டுப்பாடாக இருந்தது . தற்போது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு வேறு ஒரு நபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதிய ஒப்புனுதாரர் கால்நடைகளை பிடிக்கிறாரா என தெரியவில்லை . கடந்த சில மாதங்களாக பள்ளிகள், கல்லூரியில் அருகே திரியும் கால்நடைகள் பெருகிவிட்டன . சாலையில் தெரியும் கால்நடைகளை உடனடியாக மாநகராட்சி சார்பில் கட்டுப்படுத்த தொடா் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

Leave A Reply

Your email address will not be published.