திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் .
தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட தலைவர் அழகிரிசாமி வரவேற்பு பேசினார்.மாநில பொதுச் செயலாமாரி முத்துமாநில பொருளாளர் இளங்கோ,நிர்வாகிகள் அருள், சுந்தரராஜ்சாமி, சத்தியமூர்த்தி,
நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாநில அமைப்பு செயலாளர் நவநீதகிருஷ்ணன்நன்றி கூறினார்.
கூட்டத்தில் 1.1.2018 ம் ஆண்டுக்கு பிறகு பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களிலிருந்து பணி மாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்றஉயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணிநிலையில் மற்றும் எதிர்கால பதவி உயர்வில் எந்த பாதிப்பும் ஏற்பாடாது வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைத்து அரசு உயர்நிலை பள்ளிகளுக்கும் 8 பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.அரசு உயர்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தை பராமரிக்கும் வகையில் செய்ய வேண்டும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுவை 5.2என்ற விகிதாச்சார நடைமுறையைபின்பற்ற வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.