விராலிமலை பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு வரும் மர்ம பெண்ணால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.சிசிடிவி காட்சி பதிவில் பதிவான காட்சியை கொண்டு மர்ம பெண்ணை கண்டுபிடுத்து போலீஸார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விராலிமலை குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பூட்டியிருக்கு வீடுகளை நோட்டமிட்டும் அவ்வாறான வீடுகள் அருகே சென்று பூட்டை உடைக்க முயற்சி செய்வதும் முயற்சி தோல்வி அடையும் நிலையில் அங்கு கையில் கிடைக்கும் பொருட்களை திருடி செல்வதும் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் தொடர் நிகழ்வாகும்.
இந்தநிலையில் வீட்டின் வெளியே இருக்கும் பொருட்கள் திடீர் திடீரென்று மாயமாவது தொடர்பாக புரியாத புதிராக குடியிருப்பு வாசிகள் இருந்து வந்த நிலையில் தற்போது சிசிடிவி காட்சி பதிவில் மர்ம பெண் ஒருவர் சிக்கியுள்ளது அப்பெண் மீதான சந்தேகம் வலுத்துள்ளது.
விராலிமலை வடக்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன் வியாழக்கிழமை இவர் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியபோது வீட்டிற்கு வெளியே இருந்த பாத்திரங்கள், இரும்பு தளவாட பொருட்கள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சி பதிவை பார்த்த போது மர்ம பெண் ஒருவர் இவர் வீட்டை இரண்டு முறை அங்கும் இங்கும் சென்றவாறு நோட்டமிடுவதும் சட்டென்று வீட்டின் காம்பவுண்டுக்குள் உள்புகுவதும் பதிவாகியுள்ளது தெரியவந்தது இதையடுத்து இப்பெண் தான் பல்வேறு பகுதிகளில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் முயற்சி தோல்வி அடையும் பட்சத்தில் கையில் கிடைக்கும் பொருட்களை களவாடி சென்றிருக்கலாம் என்ற அச்சம் குடியிருப்புவாசிகள் மத்தியில் வலுத்துள்ளது எனவே, மர்ம பெண்ணை கண்டுபிடுத்து நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறைக்கு குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.