திருச்சி கிழக்கு தமுமுக, மமக சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு ரூ. 11 லட்சத்தில் நிவாரண பொருட்களை நேரில் வழங்கினர்.
திருச்சி கிழக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் , மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக திருநெல்வேலி, தூத்துக்குடியில் கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்த பகுதி மக்களுக்காக வசூல் செய்யப்பட்ட அரிசி பருப்பு, கோதுமை ரவா, சேமியா பாக்கெட் கள், மசாலா பாக்கெட்டுகள், மல்லித்தூள் மிளகாய்த்தூள்
இது போன்ற மளிகை பொருட்கள் ஏராளமாக வாங்கப்பட்டது.
அதுபோல சேலை. பேண்ட், பாவாடை, கைலி சட்டை பிள்ளைகள் பாபா சூட் டீ சர்ட் சுடிதார் போர்வை வாலிகள் இது போன்ற எண்ணற்ற பொருள்கள் ரூபாய் 11 லட்சத்திற்கு வாங்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுற்றியுள்ள கிராமங்கள், ஏரல், முக்காணி, ஆத்தூர், சேது குவாய்தான், போன்ற ஊர்களுக்கு நேரடியாக சென்று அவர்கள் இல்லம் தேடி சென்று நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமையிலும், மாவட்டத் துணைத் தலைவர் மு.சையது முஸ்தபா, மாவட்ட துணைச் செயலாளர் முகமது காசிம், அப்துல் மாலிக், அணி செயலாளர் முகமது அலி ஜின்னா, இப்ராஹிம். இலியாஸ் ஆகியோர் முன்னிலையிலும் காமராஜர் நகர் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொருட்கள் வழங்கினர்.