எம்ஜிஆரின் 36 வது நினைவு தினத்தை முன்னிட்டு அமமுக சார்பில் திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை .
மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 36 வது நினைவு தினத்தை முன்னிட்டு
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் டிடிவி தினகரன் அறிவுறுத்தலின் பேரில்
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், 47 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான பசெந்தில்நாதன் முன்னிலையில், மாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் கோர்ட் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .
பின்னர் அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அன்னதானமும் வழங்கப்பட்டது .
இதில் மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.