திருச்சியில் பயணிகளை ஏற்றுவதில் தகராறு : கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு .
திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 44),
பாலக்கரை கீழப்படையாச்சி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து ( வயது 37)இருவரும் ஆட்டோ டிரைவர்கள்.இவர்களுக்குள் பயணிகளை ஆட்டோவில் ஏற்றி செல்வது தொடர்பாக ஏற்கனவே தகராறு ஏற்பட்ட முன் விரோதம் இருந்து வந்துள்ளது .

இந்நிலையில் திருச்சி
என் எஸ் பி ரோடு பகுதியில் ஆனந்த் தனது ஆட்டோவில் பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மணி முத்து மற்றும் அவரது ஆதரவாளர்கள் சூரிய பிரகாஷ் சீனிவாசன் ஆகியோர் சேர்ந்து போலீஸ் நிலையத்தில் ஏன் புகார் செய்தாய் என்று ஆனந்தை கேட்டு தகராறில் ஈடுபட்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் .
இந்த சம்பவம் குறித்து ஆனந்த் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .
புகாரின் பேரில் கோட்டை போலீசார் ஆட்டோ டிரைவர்கள் மாரிமுத்து, சூரிய பிரகாஷ், சீனிவாசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.