இந்திய கூட்டணி எம்பிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி காங்கிரஸ் மாநகரத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் .
இந்திய கூட்டணி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து
திருச்சியில் காங்கிரசார் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
பாராளுமன்றத்தில் புகை குண்டு வீசப்பட்ட விவகாரத்தில்
இந்தியா கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட 142 எம்பிக்களை இடைநீக்கம் செய்து ஜனநாயகப் படுகொலையை கண்டித்து, ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் எல். ரெக்ஸ் தலைமை தாங்கினார்.
இதில் கட்சியின் மாநில துணைத்தலைவர் சுப சோமு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, கோட்டத் தலைவர்கள் ராஜா டேனியல் ராய்,
பிரியங்கா பட்டேல், அரிசி கடை டேவிட், லோகேஸ்வரன், மகளிர் அணி சீலாசலஸ் பட்டேல், மணிவேல் அண்ணாதுரை மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் பாராளுமன்றத்தில் எம்பிக்களுக்கு பாதுகாப்பில்லை,
பாஜக அரசு ஜனநாயக படுகொலை செய்கிறது என நிர்வாகிகள் கண்டன உரை நிகழ்த்தினார்.